வீடு / சமையல் குறிப்பு / ஆட்டு கறி குழம்பும்,வறுத்த முட்டையும்,கோழி குருமாவும்,சப்பாத்தியும் அடுத்து சோறும்.

Photo of New Year Party dishes by பிரசன்னா பிரசன்னா NT at BetterButter
536
0
0.0(0)
0

ஆட்டு கறி குழம்பும்,வறுத்த முட்டையும்,கோழி குருமாவும்,சப்பாத்தியும் அடுத்து சோறும்.

Dec-28-2018
பிரசன்னா பிரசன்னா NT
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஆட்டு கறி குழம்பும்,வறுத்த முட்டையும்,கோழி குருமாவும்,சப்பாத்தியும் அடுத்து சோறும். செய்முறை பற்றி

விருந்தினர் வரவின் ஒரு சிறிய விருந்து

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • சௌத்இந்தியன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஆட்டுக்கறி குழம்பிற்கு
  2. ஆட்டுக்கறி அரை கிலோ
  3. தக்காளி 3
  4. சிறிய வெங்காயம் இரண்டு கைப்பிடி
  5. பெரிய வெங்காயம் ஒன்று
  6. இஞ்சி பூண்டு விழுது மூன்று ஸ்பூன்
  7. மூன்று ஸ்பான் மிளகாய் தூள்
  8. அரை ஸ்பூன் கரம் மசாலா
  9. சிறிது கஸ்தூரி மெத்தி
  10. உப்பு தேவையான அளவு
  11. 100 கிராம் கடலை எண்ணெய்
  12. பட்டை இரண்டு துண்டு
  13. லவங்கம் 4
  14. அரைக்க
  15. அரை மூடி தேங்காய்
  16. சிறிது முந்திரி (தேவை என்றால்)
  17. கோழி குருமாவிற்கு
  18. கோழி கறி அரை கிலோ
  19. வெங்காயம் 3
  20. தக்காளி 4
  21. பட்டை 3 துண்டு
  22. லவங்கம் 4
  23. அண்ணாச்சி மொக்கு 2
  24. மஞ்சள் அரை ஸ்பூன்
  25. மிளகாய்த்தூள் 3 ஸ்பூன்
  26. கரம் மசாலா தூள் அரை ஸ்பூன்
  27. 4 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  28. உப்பு தேவையான அளவு
  29. எண்ணெய் 100 கிராம்
  30. அரைக்க
  31. தேங்காய் அரை மூடி
  32. கசகசா சிறிது அளவு
  33. பச்சை மிளகாய் 2
  34. சோம்பு (தேவைப்பட்டால்)சிறிது
  35. மிளகு அரை ஸ்பூன்
  36. சீரகம் சிறிது
  37. சப்பாத்திக்கு
  38. கோதுமை மாவு இரண்டு கப்
  39. உப்பு ஒரு ஸ்பூன்
  40. எண்ணெய் சிறிதளவு
  41. முட்டை ஒன்று,
  42. சர்க்கரை ஒரு ஸ்பூன்
  43. தேவையான தண்ணீர்
  44. முட்டை வறுவல்
  45. வேகவைத்த முட்டை இரண்டு
  46. மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன்
  47. இஞ்சி பூண்டு விழுது அரை ஸ்பூன்
  48. உப்பு தேவையான அளவு
  49. எண்ணெய் ஒரு மேஜை கரண்டி.

வழிமுறைகள்

  1. ஆட்டு கறி குழம்பிற்கு,வெங்காயம் தக்காளியை நறுக்கி கொள்ளவும்.
  2. இஞ்சி பூண்டு விழுது நன்கு இரண்டு பச்சை மிளகாய் சிறிது உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  3. அரைக்கும் பொருட்களோடு சேர்த்து தேங்காயை நன்கு மைய அரைத்து கொள்ளவும்.
  4. அரை கிலோ ஆட்டு கறியை நன்கு சுத்தம் செய்து எடுத்து கொள்ளவுக்.
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் தாளிக்கவும்.
  6. நறுக்கிய சிறிய வெங்காயம்,பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  7. பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  8. நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு குழைய மிதமான தீயில் வதக்கவும்.
  9. மிளகாய்த்தூள், கரம் மசாலா, சேர்த்து பிரட்டவும்
  10. எண்ணெய் பிரிந்து வரும் போது கழுவிய ஆட்டு கறியை சேர்க்கவும்.
  11. சிறிது நேரம் மூடி வைக்கவும்
  12. தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வந்ததும் இறக்கவும்.
  13. இறங்கியதும் மிதமான தீயில் வைத்து உப்பு,காரம் சரி பார்த்து,சிறிது கஸ்துரி மெத்தி சேர்த்து கொதி விடவும்.
  14. அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.
  15. தேங்காய் விழுது சேர்த்து சிறிது நேரம் கொதித்ததும்.மல்லி இலை சேர்த்து இறக்கவும்.
  16. சுவையான ஆட்டு கறி குழம்பு தயார்.
  17. கோழி குருமாவிற்கு
  18. சுத்தம் செய்த கோழி துண்டுகளை எடுத்து கொள்ளவும்.(படங்கள் சிறிது பழுதால் படிவேற்ற முடிய வில்லை )
  19. ஒரு மண்சட்டியில் எண்ணெய் காய்ந்ததும் பட்டை,லவங்கம்,அண்ணாச்சி மொக்கு,சேர்த்து பொரிக்கவும்
  20. நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்
  21. நறுக்கிய தக்காளி ,சிறிது உப்பு ,அரை ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
  22. கழுவிய கோழி கறி, மற்றும் மிளகாய்த்தூள், தேவையான உப்பு கரம் மசாலா சேர்த்து மூடி வைத்து vega விடவும்.
  23. கறி வெந்து வரும் போது அரைத்த தேங்காய் விழுதை (முந்திரி சேர்த்த)சேர்த்து நன்கு கொதி விடவும்.
  24. நன்கு கொதி வரும் போது ருசி பார்த்து நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்
  25. சப்பாத்தி (ரொட்டி)
  26. இந்த வகை ரொட்டிக்கு அதிகம் எண்ணெய் விட தேவை இல்லை
  27. இரண்டு கப் கோதுமை மாவை எடுத்து அதில் ஒரு முட்டை,ஒரு ஸ்பூன் சர்க்கரை,ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்
  28. அரை மணி நேரம் கழித்து பின்பு ,பிசைந்த மாவில் சிறு சிறு துண்டுகளாக உருட்டி சிறிது கோதுமை மாவில் உருட்டி,பிரட்டி கொள்ளவும்.
  29. உருட்டிய மாவை பூரி தேய்க்கும் கட்டை கொண்டு எண்ணெய் விடாமல் தேய்க்கவும், மெலிதாக இல்லாமல் தேய்த்தால் போதும்(முட்டை சேர்ந்ததால் எண்ணெய் விடாமலே மிருதுவாக இருக்கும்)
  30. தேய்த்த ரொட்டியை தோசை கல்லில் சிறிது ஓரம் மட்டும் எண்ணெய் விட்டு மிதமான தீயில் இரு புறமும் நன்கு வேக வைத்து எடுகவும்.
  31. முட்டை வறுவல்
  32. ஒரு தட்டில்,மிளகாய்த்தூள்,உப்பு, சிறிது இஞ்சி பூண்டு விழுது ,சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு குழைய சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து கொள்ளவும்.
  33. தோசை கல்லில் எண்ணெய் ஊற்றவும்
  34. எண்ணெய் சூடானதும்,மிதமான தீயில் குழைத்த மிளகாய் கலவையையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
  35. பின்பு வேக வைத்த முட்டையை இரண்டாக நறுக்கி அந்த மிளகாய் மசாலா மேல் வைத்து சிறிது நேரம் தீயில் வறுக்கவும்.(புரட்டி போட கூடாது)

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்