வீடு / சமையல் குறிப்பு / பாரம்பரிய சவுத்இந்தியன் பார்டி

Photo of Traditional South Indian party by pavumidha arif at BetterButter
292
2
0.0(0)
0

பாரம்பரிய சவுத்இந்தியன் பார்டி

Jan-15-2019
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
85 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாரம்பரிய சவுத்இந்தியன் பார்டி செய்முறை பற்றி

இதில் தேங்காய் சாதம்,மட்டன் எலும்பு குழம்பு,பட்டர்பீன்ஸ் முந்திரி கிரேவி, கேரட் தேங்காய் பூ பொரியல், தக்காளி புளி தொக்கு,சிக்கன் தயிர் ப்ரை,தயிர் பச்சடி உள்ளது.பார்ட்டிகளுக்கு ஏற்ற உணவு.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கடினம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • ஸ்டீமிங்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேங்காய் சாதம் செய்ய:::::
  2. அரிசி 2 கப்
  3. தேங்காய் பால் 2 கப்
  4. தண்ணீர் 1 கப்
  5. வெங்காயம் 2
  6. தக்காளி 2
  7. நெய் 3 டீஸ்பூன்
  8. எண்ணெய் 2 டீஸ்பூன்
  9. இஞ்சி பூண்டு விழுது 3 டீஸ்பூன்
  10. புதினா 1/4 கப்
  11. நறுக்கிய கேரட் 1/2 கப்
  12. மல்லி தழை 1/4 கப்
  13. மிளகாய் பொடி 1 டீஸ்பூன்
  14. உப்பு தேவையான அளவு
  15. கேரட் தேங்காய் பூ பொரியல்::::
  16. கேரட் 1 கப்
  17. கருவேப்பிலை சிறிது
  18. மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
  19. உப்பு தேவையான அளவு
  20. தயிர் 1/4 கப்
  21. தேங்காய் பூ 1/4 கப்
  22. பச்சை மிளகாய் 1
  23. எண்ணெய் தேவையான அளவு
  24. தக்காளி புளி தொக்கு:::
  25. தக்காளி 3
  26. சின்ன வெங்காயம் 10
  27. கருவேப்பிலை சிறிது
  28. மல்லி தழை 1//4 கப்
  29. கடுகு 1/2 டீஸ்பூன்
  30. உழுந்து பருப்பு 1/2 டீஸ்பூன்
  31. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  32. மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
  33. மல்லி தூள் 1/2 டீஸ்பூன்
  34. புளி தண்ணீர் 1/4 கப்
  35. தயிர் பச்சடி:::
  36. தயிர் 1 கப்
  37. வெங்காயம் 1
  38. பச்சை மிளகாய் 1
  39. கேரட் சிறிது
  40. மல்லி தழை சிறிது
  41. உப்பு தேவையான அளவு
  42. கேரட் தேங்காய் பூ பொரியல்:::
  43. கேரட் 3
  44. தேங்காய் பூ 1/4 கப்
  45. கடுகு 1/2 டீஸ்பூன்
  46. உளுந்து பருப்பு 1/2 டீஸ்பூன்
  47. கருவேப்பிலை
  48. உப்பு தேவையான அளவு
  49. பட்டர்பீன்ஸ் முந்திரி கிரேவி::::
  50. பட்டர் பீன்ஸ் 1 கப்
  51. முந்திரி பருப்பு 20
  52. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  53. மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
  54. சீரக தூள் 1/2 டீஸ்பூன்
  55. சோம்பு தூள் 1/2 டீஸ்பூன்
  56. கரம் மசாலா 1/2 டீஸ்பூன்
  57. உப்பு தேவையான அளவு
  58. உருளைக்கிழங்கு 2
  59. வெங்காயம் 1
  60. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  61. தக்காளி 1
  62. எண்ணெய் தேவையான அளவு
  63. தயிர் சிக்கன் ப்ரை ::::
  64. தயிர் 1/2 கப்
  65. சிக்கன் 1 கப்
  66. உப்பு தேவையான அளவு
  67. எண்ணெய் தேவையான அளவு
  68. சிக்கன் தூள் 2 டீஸ்பூன்
  69. சோள மாவு 5 டீஸ்பூன்
  70. மட்டன் எலும்பு குழம்பு::::
  71. மட்டன் மற்றும் எலும்பு 1 கப்
  72. பட்டை 1/2 இன்ச்
  73. கிராம்பு 2
  74. ஏலக்காய் 2
  75. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  76. மல்லி தூள் 2 டீஸ்பூன்
  77. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  78. மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
  79. வெங்காயம் 1
  80. தக்காளி 1
  81. எண்ணெய் தேவையான அளவு
  82. உப்பு தேவையான அளவு
  83. கரம் மசாலா 1/2 டீஸ்பூன்
  84. தேங்காய் விழுது 1/4 கப்

வழிமுறைகள்

  1. தேங்காய் சாதம் செய்ய::::
  2. பாத்திரத்தில் நெய் மற்றும் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
  3. பின்னர் வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்
  4. பிறகு தக்காளி சேர்த்து அதனுடன் மல்லி தழை, புதினா மற்றும் கேரட் சேர்த்து கிளறவும்
  5. தேங்காய் பூவை அரைத்து பால் எடுத்து கொள்ளவும்.தனியாக வைக்கவும்.
  6. இப்போது சிறிது மிளகாய் தூள்,உப்பு சேர்த்து தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விடவும்
  7. பின் அரிசி சேர்த்து வேக விடவும். தண்ணீர் வற்றி அரிசி நன்றாக வெந்த பின் தோசை சட்டியை சூடேற்றி அதன் மேல் சாத பாத்திரத்தை வைத்து தம்மில் வைக்கவும்.
  8. பின்பு 10 நிமிடம் கழித்தால் சிறிது நெய் ஊற்றி லேசாக கிளறவும்.
  9. சுவையான தேங்காய் சாதம் தயார்.
  10. தக்காளி புளி தொக்கு செய்ய::::
  11. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து பருப்பு, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  12. பின் பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் சேர்த்து கொள்ளவும். இதனுடன் வெங்காயம் சேர்க்கவும்
  13. வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை நன்கு வதக்கவும்.
  14. புளியை 1/4 கப் தண்ணீரில் நன்றாக ஊற வைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்
  15. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து கிளறவும். இதனுடன் மஞ்சள் தூள்,மிளகாய் தூள், உப்பு, சிறிது சிக்கன் மசாலா சேர்த்து கிளறவும்
  16. 10-15 நிமிடம் பின்னர் புளி கரைசல் ஊற்றி கிளறவும்.சிறிது கொத்தமல்லி இலை தூவி விடவும்
  17. நன்கு கெட்டி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  18. சுவையான தக்காளி புளி தொக்கு தயார்
  19. தயிர் பச்சடி செய்ய::;
  20. ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி அதனுடன் வெங்காயம்,பச்சை மிளகாய் மற்றும் துருவிய கேரட் சேர்த்து கொள்ளவும்
  21. பின் அதில் சிறிது உப்பு சேர்த்து கிளறினால் தயிர் பச்சடி தயார்
  22. கேரட் தேங்காய் பூ பொரியல் செய்ய::::
  23. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுத்தம்பருப்பு கருவேப்பிலை போட்டு வறுத்து துருவிய கேரட் சேர்க்கவும்.
  24. எண்ணெயில் 5 நிமிடம் நன்கு வேக விடவும்.பின்னர் தண்ணீர் ஊற்றி கேரட்டை மூடி இட்டு வேக விடவும்.
  25. மூடுவதற்கு முன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
  26. நன்றாக வெந்ததும் தேங்காய் பூ சேர்த்து கிளறி அடுப்பில் 5-10 வைத்து இறக்கவும்
  27. ஆரோக்கியமான கேரட் தேங்காய் பூ பொரியல் தயார்
  28. சிக்கன் தயிர் ப்ரை::::
  29. சிக்கனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவி வைக்கவும்.
  30. பின்னர் சிக்கன் மசாலா,1/4 கப் தயிர், உப்பு சேர்த்து கிளறி வைக்கவும்.பின்னர் சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 30 நிமிடம் ஊற விடவும்
  31. கடாயில் எண்ணெய் ஊற்றி ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக பொரித்து எடுக்கவும்.
  32. காரசாரமான சிக்கன் தயிர் ப்ரை தயார்
  33. மட்டன் எலும்பு குழம்பு::::
  34. குக்கரில் மட்டன் மற்றும் எலும்பு துண்டு சேர்த்து 3 விசில் வைக்கவும்.
  35. மிக்ஸியில் இஞ்சி பூண்டு விழுது, ஏலக்காய், பட்டை,கிராம்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  36. பின்னர் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்த விழுது,மல்லி தூள்,மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்
  37. சிறிது கரம் மசாலா பின்ச் சேர்த்து கொள்ளவும். உப்பு சேர்த்து கொள்ளவும்
  38. குக்கரில் 2-3 விசில் விடவும். திறந்து பின் சிறிது தேங்காய் விழுது சேர்த்து 5-10 நிமிடம் கழித்து இறக்கவும்
  39. சுவையான மட்டன் எலும்பு குழம்பு தயார்
  40. பட்டர்பீன்ஸ் முந்திரி கிரேவி::::
  41. முந்திரி பருப்பை மிக்ஸியில் நன்றாக அரைத்து தனியாக வைத்து கொள்ளவும்
  42. பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து வதக்கவும்
  43. பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பொன்னிறமாக மாறிய பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  44. பச்சை வாசனை போன பின்னர் தக்காளி சேர்த்து கிளறவும்.
  45. இப்போது கருவேப்பிலை, மிளகாய் தூள் ,சீரக தூள்,கரம் மசாலா மற்றும் சோம்பு தூள் சேர்த்து கிளறவும்.
  46. பின்னர் பட்டர்பீன்ஸ்,உருளைக்கிழங்கு மற்றும் முந்திரி அரைத்த கலவை சேர்த்து கிளறி தண்ணீர் சேர்க்கவும்
  47. 2 விசில் விட்டு இறக்கி மல்லி தழை சேர்த்து இறக்கவும்.
  48. சுவையான பட்டர்பீன்ஸ் முந்திரி கிரேவி தயார்
  49. பாரம்பரிய சவுத்இந்தியன் பார்ட்டிகளுக்கு ஏற்ற தேங்காய் சாதம்,முந்திரி பட்டர்பீன்ஸ் கிரேவி,மட்டன் எலும்பு குழம்பு, தயிர் பச்சடி,கேரட் தேங்காய் பூ பொரியல், சிக்கன் தயிர் ப்ரை ,தக்காளிபுளி தொக்கு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்