வீடு / சமையல் குறிப்பு / கார சேமியா (சேவியன்) உப்மா

Photo of Savoury Semiya (Seviyan) Uppuma by Sujata Shukla at BetterButter
1144
40
4.0(0)
0

கார சேமியா (சேவியன்) உப்மா

Sep-01-2015
Sujata Shukla
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெர்மிசிலி (சேமியா) 1 1/2 கப்
  2. எண்ணெய் 1 தேக்கரண்டி
  3. முந்திரி பருப்பு 4-5
  4. உலர் திராட்சி கொஞ்சம்
  5. கடுகு (ராய்) 1/8 தேக்கரண்டி
  6. பச்சை மிளகாய் - 1
  7. வெங்காயம் - 1
  8. கரிவேப்பிலை 1 கொத்து
  9. இஞ்சித் துண்டு 1/4
  10. பச்சைப் பட்டாணி 1 தேக்கரண்டி
  11. தக்காளி 1
  12. மிளகு 2
  13. நெய் 2 தேக்கரண்டி
  14. கொத்துமல்லி (தானிய இலைகள்)
  15. உப்பு - சுவைக்கேற்ற அளவு
  16. தண்ணீர் 1.5 கப்

வழிமுறைகள்

  1. வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி மற்றும் கரிவேப்பிலை ஆகியவற்றை நறுக்கி ( 2 நறுக்காமல் வைக்கவும், அலங்காரத்திற்கு) வைத்துக்கொள்ளவும். மிளகை பொடி செய்துகொள்ளவும். தக்காளியை கனசதுராமாக வெட்டிக்கொள்ளவும்.
  2. சேமியா வறுக்கப்படாமல் இருந்தால், இடைவிடாமல் தொடர்ந்து கலக்கி எண்ணெய் விடாமல் வறுக்கவும், அப்போதுதான் கடாயில் அடிபிடிக்காது. வறுத்ததை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. கடாயில் உள்ள எண்ணெயை சூடாக்கவும், குறைவான வெப்பத்திற்குக் கொண்டுவந்து முந்திரி (30 நொடிகள்) உலர் திராட்சைகள் (10 நொடிகள்) தனித்தனியே வறுக்கவும். எண்ணெயில் இருந்து எடுத்து உலர்த்தி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. சில நொடிகள் 2 முழு கரிவேப்பிலை இலைகளை வறுக்கவும், அலங்காரம் செய்ய அதை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  5. கடாயில் மீதமுள்ள எண்ணெயில், கடுகு சேர்க்கவும். வெடிக்க ஆரம்பித்ததும் (10 நொடிகள்) பச்சை மிளகாயை சேர்க்கவும் (10 நொடிகள்)
  6. ஔயூடுரும் நிலைவரை வெங்காயத் துண்டுகளை வறுக்கவும் (கிட்டத்தட்ட 30லிருந்து 60 விநாடிகள் வரை). இஞ்சி சேர்த்து 10 விநாடிகளுக்கு வதக்கவும். கரிவேப்பிலை இலைகளைச் சேர்க்கவும்.
  7. பட்டாணிகளையும் தக்காளியையும் சேர்த்து 10 விநாடிகளுக்கு வதக்கவும்.
  8. கடாயில் தண்ணீர்விட்டு கொதிக்கவிடவும், தீயை அடக்கவும். உப்பையும் பொடி செய்த மிளகையும் சேர்க்கவும். பட்டாணி மிருதுவாகும்வரை சமைக்கவும், கரண்டியின் பின்பக்கத்தினால் அல்லது உங்கள் விரல்களால் நசுக்கக்கூடிய வகையில் சமைக்கவும்.
  9. சேமியாவைச் சேர்த்து கலக்கவும், அப்போதுதான் அது பரவும் கட்டியாகாது. தண்ணீர் சேமியாவைச் சற்றே மூடியிருக்கவேண்டும். 'எனது இரகசிய சாஸ்' கீழே துரித குறிப்பைப் பார்க்கவும்
  10. சேமியாவை 5 நிமிங்களுக்கு கலக்கிச் சமைக்கவும். அப்போதுதான் கடாயில் அடிபிடிக்காது. சேமியாவின் இழைகள் மிருதுவாகி அதன் அசல் அளவை விட இரட்டிப்பு அளவு தடிமனாக மாறும்.
  11. நெய் சேர்த்து மீண்டும் கலக்கவும். பாதியளவு முந்திரி மற்றும் உலர் திராட்சைகளைச் சேர்க்கவும்.
  12. பரிமாறும் தட்டுக்கு மாற்றவும் (உப்மா சூடான கடாயில் ஒட்டிக்கொள்ளும், உடனே எடுக்காவிட்டால்)
  13. மீதமுள்ள முந்திரிபருப்பு, உலர் திராட்சைகள், எடுத்துவைத்த வறுத்த கரிவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்துள்ள கொத்துமல்லி இலைகளைக் கொண்டு அலங்காரம் செய்க.
  14. தக்காளிச் சட்னி அல்லது ஒரு வெங்காய தக்காளி சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்