வீடு / சமையல் குறிப்பு / முட்டையில்லாமல் பேக் செய்யாமல் வேகவைத்த மோச்சா கேக்

Photo of Eggless no bake steamed Mocha cake by Vandana Jangid at BetterButter
14501
191
4.6(0)
0

முட்டையில்லாமல் பேக் செய்யாமல் வேகவைத்த மோச்சா கேக்

Aug-23-2016
Vandana Jangid
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிறிஸ்துமஸ்
  • ஃப்யூஷன்
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 1 1/4 கப் மைதா
  2. பேக்கிங் பவுடர் 1/2 தேக்கரண்டி
  3. பேக்கிங் சோடா 1/2 தேக்கரண்டி
  4. தயிர் 1/2 கப்
  5. பால் 1/2 கப்
  6. சர்க்கரை 3/4 கப்
  7. சாக்லேட் பாகு 1/4 கப்
  8. கொகோ பவுடர் 2 தேக்கரண்டி
  9. காபி பவுடர் 2 தேக்கரண்டி
  10. வெண்ணெய் 1 தேக்கரண்டி
  11. சிட்டிகை உப்பு
  12. தண்ணீர் 1/2 கப்
  13. உங்கள் விருப்பத்திற்கேற்ப அடித்த கிரீம்

வழிமுறைகள்

  1. ஒரு கிண்ணத்தில் மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, கொகோ பவுடரைக் கலந்துகொள்ளவும்.
  2. இன்னொரு கிண்ணத்தில் சர்க்கரையோடு கொஞ்சம் வெதுவெதுப்பானப் பாலைச் சேர்த்துக்கொள்ளவும். தயிர் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  3. உலர் பொருள்களை திரவப் பொருள்களோடு கலந்துகொள்ளவும். சாக்லேட் பாகைச் சேர்க்கவும்.
  4. ஒரு பெரிய பாத்திரத்தில் அல்லது பிரஷர் குக்கரில் தண்ணீரைக் கொதிக்கவைக்கவும். ஒரு ஒயர் ரேக்கை அல்லது பாத்திரத்தின் அடியில் உள்ள வளையத்தை எடுத்துக்கொள்ளவும்
  5. பேக்கிங் டின்னை கிரீஸ் செய்துகொள்ளவும். டின்னில் கேக் மாவை ஊற்றவும்.
  6. இந்தக் கேக் டின்னை ஒயர் ரேக்கில் வைக்கவும். மூடியால் மூடி வேகவைக்கவும்.
  7. டாப்பிங்கிற்கு:
  8. ஒரு கடாயை எடுத்து காபி பவுடரை சிறு தீயில் 10 நிமிடங்கள் வறுக்கவும். 1/2 கப் தண்ணீர் சர்க்கரையை சுவைக்கேற்றபடி சேர்க்கவும்.
  9. வெண்ணெய் 1 தேக்கரண்டி பால் சேர்க்கவும். அடர்த்தியான பதம் வரும்வரை கலந்துகொள்ளவும்.
  10. கேக் ஆறியதும், காபி கிளேசை அதில் ஊற்றவும். கேக்கை அடித்த கிரீமால் அலங்கரித்து விரும்பிய வடிவத்தில் வெட்டிக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்