வீடு / சமையல் குறிப்பு / காய்கறி பிராங்கி

Photo of Vegetable Frankie by Salma Godil at BetterButter
4243
900
4.4(0)
1

காய்கறி பிராங்கி

Sep-01-2015
Salma Godil
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • இந்திய
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சப்பாத்திக்கு: மைதா - 2 கப்
  2. உப்பு - தேவையான அளவு
  3. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  4. தண்ணீர் - 1/2 கப்
  5. முட்டை - 1 (அடித்து, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தது)
  6. கட்லெட்டுக்கு: உருளைக்கிழங்கு - 4 (வேகவைத்தது)
  7. குடமிளகாய் - 1/2 (நறுக்கியது)
  8. பட்டாணி - 1/4 கப் (வேகவைத்தது)
  9. இனிப்பு சோளம் - 1/2 கப் (வேகவைத்தது)
  10. கேரட் - 1/2 கப் (துருவல்)
  11. இஞ்சிப்பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
  12. பச்சை மிளகாய்ச் சாந்து - 1/2 தேக்கரண்டி
  13. கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
  14. சீரகத் தூள் - 1/4 தேக்கரண்டி
  15. சாட் மசாலா - 1 தேக்கரண்டி
  16. உப்பு - சுவைக்கேற்ற அளவு
  17. கொத்துமல்லி - கொஞ்சம்
  18. எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
  19. சோள மாவு - 2 தேக்கரண்டி
  20. எண்ணெய் - பொரிப்பதற்கு
  21. ஒருங்கிணைப்பிற்கு: வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
  22. கொத்துமல்லி இலைகள் - 1/2 கிண்ணம் (பொடியாக நறுக்கியது)
  23. புளிச் சாறு - 1/2 கிண்ணம்
  24. சாட் மசாலா - 1/2 கப்
  25. வெண்ணெய் - 2 கட்டிகள் (துருவல்)

வழிமுறைகள்

  1. சப்பாத்திக்கு: அனைத்துப் பொருள்களையும் கலந்து மிருதுவான மாவாகப் பிசைந்துகொள்க. மெலிதானச் சப்பத்தியாக உருட்டி தாவாவில் சற்றே வேகவைத்துக்கொள்ளவும். அடித்த முட்டையை சப்பாத்தியின் ஒரு பக்கத்தில் வைத்து முட்டை வேகும்வரை வறுத்துக்கொள்க. இறுக்கமாக மூடி எடுத்து வைக்கவும்.
  2. கட்லெட்டுக்கு: உருளைக்கிழங்கு, பட்டாணியை மசித்து கரடமுரடாக மசித்த சோளம், கேரட், குடமிளகாயைச் சேர்க்கவும்.
  3. இப்போது மீதமுள்ள பொருள்களைச் சேர்த்து நீளமானக் கட்லெட்டுகளாகச் செய்துகொள்ளவும். அவற்றை எண்ணெயில் பொரித்து எடுத்துவைக்கவும்.
  4. ஒருங்கிணைப்புக்கு: மேல் பகுதியில் முட்டையுடன் உள்ள சப்பாத்தியை எடுத்து கட்லெட்டை அதன் மீது வைக்கவும்.
  5. அதன்பின்னர் புளிச்சாறு, வெங்காயம், கொத்துமல்லி இலைகள், சாட் மசாலா, வெண்ணெய் ஆகியவற்றை தூவவும். இறுக்கமாக உருட்டுக. ஒரு பல்குத்தும்குச்சியைச் சொறுவுக அல்லது சில்வர் ஃபாயிலில் சுருட்டிக்கொள்க.
  6. பச்சை சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்