Photo of Thayir Vadai by Radha Balu at BetterButter
612
0
0.0(0)
0

தயிர்வடை

Mar-26-2019
Radha Balu
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தயிர்வடை செய்முறை பற்றி

மாலை நேர லைட் டிஃபன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உளுத்தம்பருப்பு ... 1 கப் 
  2. அரிசி ... 1டீஸ்பூன்
  3. உப்பு ... தேவையான அளவு 
  4. பெருங்காயப்பொடி ... 1/4டீஸ்பூன் 
  5. புளிக்காத கெட்டித் தயிர் ...  1கப் 
  6. பால் ... 1/4 கப் 
  7. அரைக்க...
  8. பச்சை மிளகாய் ...  2
  9. இஞ்சி ... ஒரு சிறு துண்டு 
  10. தேங்காய்த்துருவல் ... 1/4கப் 
  11. முந்திரிபருப்பு ... 8
  12. உப்பு ...  தேவையான அளவு
  13. சீரகம் ...  1/2 தேக்கரண்டி 
  14. எண்ணை  ...  வேகவிட 
  15. அலங்கரிக்க....
  16. சீரகப்பொடி,  காரப்பொடி, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி
  17. பூந்தி ஒரு கப்.

வழிமுறைகள்

  1. உளுத்தம்பருப்பைக் களைந்து, 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்துவிட்டு நைசாக,  கெட்டியாக அரைக்கவும்.
  2. கடைசியில் உப்பு, பெருங்காயப்பொடி சேர்த்து கலந்து  எடுக்கவும்.
  3. அரைக்க கொடுத்துள்ள பச்சை மிளகாய் முதல் சீரகம் வரை உள்ளவற்றை நைசாக அரைத்து,  தயிர்  சேர்த்து மேலும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். பாலை சேர்க்கவும்.
  4. எண்ணையைக் காயவைத்து,  வடைகளைத் தட்டி  வெது வெதுப்பான நீரில் ஒரு நிமிடம் போட்டு,கலந்து வைத்துள்ள தயிர்க் கலவையில் போடவும். ஊறியதும் எடுத்து வேறு தட்டில் வைக்கவும்.
  5. மேலே அலங்கரிக்கக் கொடுத்துள்ளவற்றை வரிசையாகத் தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்