வீடு / சமையல் குறிப்பு / உடனடி ரசமலாய்

Photo of Instant Rasmalai by Sujata Limbu at BetterButter
3844
805
4.6(0)
0

உடனடி ரசமலாய்

Sep-02-2015
Sujata Limbu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • மேற்கு வங்காளம்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. 15-16 ரசகுலாக்கள்
  2. 250 மிலி பால்
  3. 125 மிலி சுண்டிய பால்
  4. 7-8 பிஸ்தா, தோலுரித்து நறுக்கப்பட்டது
  5. ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் (விருப்பம் சார்ந்தது)
  6. அலங்கரிப்பதற்குக் கொஞ்சம் குங்குமப்பூ

வழிமுறைகள்

  1. ஒரு கடாயை எடுத்து சுண்டியப் பாலை ஒரு தேக்கரண்டி பாலுடன் ஊற்றி நன்றாகக் கலக்கிக்கொள்க.
  2. மீதமுள்ளப் பாலை ஊற்றி இந்தப் பால் கலவை மிதமானச் சூட்டி கொதிக்கவிடவும். 5 நிமிடத்திற்கு அல்லது அதற்கும்மேல் தொடர்ந்து கிண்டவும்.
  3. அடுத்து குங்குமப்பூத் தாள்களைச் சேர்க்கவும், இது பாலின் கலவையை சற்றே மஞ்சள் நிறத்திற்கு மாற்றும்.
  4. பிஸ்தா, ஏலக்காய்த் தூள் சேர்த்து ஒரு நல்ல கலக்குக் கலக்கவும். இந்தக் கலவை கொதிக்கவும்.
  5. இதற்கிடையில், மெதுவாக ரசகுல்லாவிலிருந்து அதிகப்படியானச் சர்க்கரை சிரப்பை பிழிந்தெடுக்கவும்.
  6. இப்போது இந்த ரசகுல்லாக்களை உங்கள் உள்ளங்கைகளில் வைத்து தட்டையாக அடை வடிவத்திற்குச் செய்துகொள்ளவும்.
  7. இந்த தட்டையான ரசகுல்லாக்களைப் பால் கலவையில் போட்டு சிம்மில் வைக்கவும். மேலும் 5 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  8. அடுப்பை நிறுத்திவிட்டு, பாத்திரத்தை வெளியே எடுத்து ஆறவைக்கவும்.
  9. ஒரு மணி நேரத்திற்கோ அதற்கு மேலோ பிரிஜ்ஜில் வைத்து சில்லென்று பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்