வீடு / சமையல் குறிப்பு / சாபுதானா தலிபீத் | ஜவ்வரிசி அடை

Photo of Sabudana Thalipeeth | Sago Pearls Flatbread by Meena C R at BetterButter
5764
571
4.7(0)
0

சாபுதானா தலிபீத் | ஜவ்வரிசி அடை

Sep-02-2015
Meena C R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • மகாராஷ்டிரம்
  • ரோசஸ்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1 கப் ஊறவைத்த ஜவ்வரிசி | சாபுதானா | டாபியோகா
  2. 4- பெரிய உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்தது
  3. 2 தேக்கரண்டி- வருத்த வேர்க்கடலை உடைத்தது
  4. 3 பச்சை மிளகாய் நன்றாக வெட்டப்பட்டது
  5. 1 டீக்கரண்டி சீரகம் உலர்ந்து வறுத்தது
  6. 1/2 டீக்கரண்டி இஞ்சி நன்றாக வெட்டப்பட்டது
  7. தலிபீத்தை பரப்புவதற்கு பாலித்தீன் பேப்பர்
  8. சுவைக்கேற்ப்ப உப்பு

வழிமுறைகள்

  1. சப்பாத்தி மாவு போன்று செய்வதற்கு ஓர் கிண்ணத்தில் தேவையான பொருள்கள் அனைத்தையும் எடுத்து கொள்ளவும். அதில் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை ஏன்னென்றால் உருளைக்கிழங்கில் இருக்கும் ஈரமே போதுமானது.
  2. மாவை 8-9 சமமான பந்துகளாக செய்துக்கொள்ளவும் அது ஒரு பெரிய எலுமிச்சை அளவில் இருக்க வேண்டும்.
  3. பாலித்தீன் தாளை தட்டின் மீது வைக்கவும். ஒரு உருண்டையை தாளின் நடு பகுதியில் வைத்து 3 அங்குல விட்டத்தில் வட்டமாக செய்ய வேண்டும். அதனை மெலிதாக வரும்வரை பொறுமையாக தட்டவும்.
  4. நான்ஸ்டிக் பாத்திரத்தை அதிக தீயில் வைக்கவும். பாத்திரம் சூடானதும் தீயினை குறைத்துக் கொள்ளவும். தயார் செய்து வைத்த அடையை மெதுவாக பாத்திரத்தில் வைத்து வேகவிடவும்.
  5. ஒரு நிமிடம் கழித்து பின் அடையை மெதுவாக மறுபுறம் திருப்பி விடவும். அடையின் மேற்பரப்பு பழுப்பு நிற புள்ளிகள் தெரிந்தவுடன் அவை தயாராகிவிட்டது என்று அர்த்தம், பிறகு அதை தட்டிற்கு மாற்றிவிடலாம்.
  6. இதே முறையில் மீதமுள்ள அடையை தயார் செய்யவும். இவற்றை புளி சட்னி மற்றும் தயிருடன் சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்