வீடு / சமையல் குறிப்பு / சிந்தி கோகி

Photo of Sindhi Koki by Meena C R at BetterButter
6850
132
4.6(0)
0

சிந்தி கோகி

Sep-02-2015
Meena C R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • சிந்தி
  • ரோசஸ்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1 கப் முழு கோதுமை மாவு
  2. 1 தேக்கரண்டி வீட்டில் தயாரிக்கப்பட்ட நெய் | வெளுக்கப்பட்ட வெண்ணெய்
  3. தோராயமாக 1/2 கப் தண்ணீர்
  4. 3 தேக்கரண்டி புதிய மல்லி | கொத்துமல்லி இலைகள் பொடியாக நறுக்கியது
  5. 2 கொத்து புதிய புதினா | புதினா இலைகள் ஒன்றம்பாதியுமான நறுக்கியது
  6. 1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது | சுவைக்காக
  7. 1 தேக்கரண்டி இஞ்சி பொடியாக நறுக்கியது
  8. 1/4 கப்புக்கும் குறைவாக ஓமம்
  9. 1/4 தேக்கரண்டிக்கும் குறைவாக கருமிளகு பொறபொறப்பாக நசுக்கியது
  10. 1/4 தேக்கரண்டி உலர் மாதுளை விதைகள் பொறபொறப்பாக நசுக்கியது
  11. ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
  12. ஒரு சிட்டிகை பெருங்காயம்
  13. 1/2 தேக்கரண்டிக்கும் குறைவாக உப்பு | சுவைக்கு
  14. ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்
  15. 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் | சமையல் எதுவாகினும்

வழிமுறைகள்

  1. ஒரு கலவைப் பாத்திரத்தில் முழு கோதுமை மாவு, நறுக்கிய கொத்துமல்லி, புதினா, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும். கைகளில் ஓமத்தையும் சீரகத்தையும் சற்றே நசுக்கி மாவில் சேர்க்கவும். கருமிளகு, மாதுளை விதைகள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்க்கவும்.
  2. நெய் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். படிப்படியாகத் தண்ணீர் சேர்த்து மாவை மென்மையாகச் சேர்க்கவும். பராத்தா மாவு போல் இருக்கவேண்டும். மூடி 15ல் இருந்து 20 நிமிடங்கள் வைக்கவும். பிறகு, மாவை இன்னும் சமமாகவும் மென்மையானதாகவும் செய்ய மீண்டும் பிசையவும்.
  3. எலுமிச்சை அளவு உருண்டைகளாக மாவை பிடித்துக்கொள்க. ஒரு பகுதியை உருண்டையாகச் செய்து சற்றே தட்டையாக்கிக்கொள்க. உலர் முழு கோதுமை மாவைத் தூவிக்கொள்க.
  4. நான் ஸ்டிக் தவாவை ஒரு சொட்டு எண்ணெய் | நெய் விட்டு கேசில் ப்ரீ ஹீட் செய்துகொள்க. உருட்டைக் கட்டையாக மாவு தூவிய பந்தை 4" விட்டத்திற்கு மொத்தமான ரொட்டியாக உருட்டிக்கொள்க. உருட்டிய ரொட்டியை தவாவில் வைக்கவும். கிட்டத்தட்ட 35-40 விநாடிகள் இரண்டு பக்கங்களையும் வேகவைக்கவும்.
  5. நிறம் மாறத் தொடங்கும்போது தவாவில் இருந்து எடுக்கவும். பாதி வெந்த ரொட்டியை நசுக்கவும். சூடாக இருக்கும், கவனம்.
  6. உருண்டையாகச் செய்துகொள்க. தட்டி, 4" விட்ட ரொட்டியாகச் செய்துகொள்க. மாவு தூவத் தேவையில்லை. உருட்டும்போது பக்கங்கள் உடையலாம், அது நல்லதுதான். இந்த கோகியை தவாவில் வைக்கவும்.
  7. மேற்பரப்பு சற்றே அடர் நிறத்திற்கு வந்ததும், கொஞ்சம் எண்ணெயை அதன் மீது விட்டுத் திருப்பிப்போடவும். அதே போல் நிறம் மாறும்போது திருப்பிப்போட்ட பக்கத்தில் கொஞ்சம் எண்ணெய் விடவும். நல்ல பழுப்பு நிறப் புள்ளிகள் இரண்டு பக்கங்களிலும் வரும் வரை கோக்கியை வறுக்கவும். வெந்ததும் தட்டில் எடுத்துக்கொள்ளவும்.
  8. அதே போல் மற்ற கோக்கிகளையும் தயாரிக்கவும். அடுத்தடுத்து நிறைய கோக்கிகள் இதுபோல தவாவில் தயாரிக்கலாம். தயிர், ரைத்தா, சட்னி, ஊறுகாய் உடன்/அல்லது பாரம்பரிய முறையில் கொஞ்சம் சிந்தி அப்பளத்தோடு சூடாக/சில்லென்று பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்