வீடு / சமையல் குறிப்பு / அவுரிநெல்லி வெண்ணெய் கேக்

Photo of Blueberry Cheesecake by BetterButter Editorial at BetterButter
3377
144
4.6(0)
0

அவுரிநெல்லி வெண்ணெய் கேக்

Sep-02-2015
BetterButter Editorial
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஆஸ்திரேலியன்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 6 கப் கிரீம்
  2. 2 கப் கிரீம் வெண்ணெய்
  3. 1 கப் சர்க்கரை
  4. 1 கப் டைஜெஸ்டிவ் பிஸ்கெட் நசுக்கியது
  5. 3/4 கப் பால்
  6. 4 முட்டைக் கரு
  7. 3 தேக்கரண்டி வெண்ணெய்
  8. 2 தேக்கரண்டி ஜெலடின்
  9. 2 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்
  10. 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  11. 1/2 கப் அவுரிநெல்லி
  12. 1 தேக்கரண்டி ஜெலடின்
  13. 2 கப் தண்ணீர்

வழிமுறைகள்

  1. பிஸ்கெட்கள் வெண்ணெயோடு ஒரு பாத்திரத்தில் கலந்து, அதை ஒரு பை டிஷ்ஷின் கீழ் சமமாக வைத்து பிரிஜ்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்.
  2. கிரீம் வெண்ணெய், வெண்ணிலா எசென்ஸ், எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் கலந்துகொள்ளவும்.
  3. ஜெலடினை 1 1/2 கப் குளிர்ந்த நீரில் கரைத்து எடுத்து வைக்கவும்.
  4. ஒரு பாத்திரத்தில் பாலைக் காய்ச்சிக்கொள்க.
  5. முட்டைக் கரு, சர்க்கரையை 2 தேக்கரண்டி பாலில் கலந்துகொள்க. இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, தொடர்ந்து கிண்டியபடி சிறு தீயில் அடர்த்தியாகும்வரை வேகவைக்கவும்.
  6. அடுப்பிலிருந்து எடுத்து ஜெடிடினோடுக் கலந்துகொள்க. ஆறட்டும்.
  7. இதை வெண்ணெய் கலவையோடு சேர்த்து மெதுவாக மடித்துக்கொள்க.
  8. கீரீம் அடர்த்தியாகும்வரை கடைந்து வெண்ணெய் கலவையோடு மடித்துககொள்க.
  9. கிரீம் வெண்ணெய் கலவையை பை டிஷ் மீது ஊற்றி இறுகும்வரை பிரிஜ்ஜில் வைக்கவும்.
  10. மீண்டும் ஜெலடினை குளிர்ந்த நீரில் கரைத்து அவுரிநெல்லியோடு கலந்துகொள்க.
  11. கலவையைக் கொதிக்கவிட்டு வேகவைக்கவும்.
  12. இதை சீஸ் கேக் மீது ஊற்றி பரிமாறுவதற்கு 30 நிமிடங்களக்கு முன்புவரை பிரிஜ்ஜில் வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்