வீடு / சமையல் குறிப்பு / இரட்டை தானிய இட்லி

Photo of Double Grains Idli by Priya Alagappan at BetterButter
1052
11
0.0(0)
0

இரட்டை தானிய இட்லி

Sep-03-2015
Priya Alagappan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கம்பு/முத்து தினை - 200 கிராம்
  2. சோளம்/ ஜோவர்/சோர்கம் - 200 கிராம்
  3. இட்லி அரிசி - 400 கிராம்
  4. உளுந்து - 200 கிராம்

வழிமுறைகள்

  1. தானியங்களையும் இட்லி அரிசியையும் நன்றாகக் கழுவி ஒரு பெரிய பாத்திரத்தில் 6 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
  2. உளுந்தைத் தனியாகக் கழுவி 2 மணி நேரத்திற்கு மட்டும் ஊறவைக்கவும்.
  3. கிரைண்டரில், ஊறவைத்த தானியங்களையும், அரிசியையும் மிருதுவான மாவாக அரைத்துக்கொள்ளவும்.
  4. அதன்பிறகு உளுந்தை அரைத்து 2 மாவையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும்
  5. உப்பு சேர்த்து நன்றாக கையால் கலக்கி, இரவு முழுவதும் 10 மணி நேரத்திற்கு நொதிக்கவிடவும்.
  6. மறுநாள் நொதித்த மாவு பொங்கியிருக்கவேண்டும்
  7. வழக்கமாக இட்லி தட்டில் ஒரு வெள்ளைத் துணி கொண்டு தயாரிப்பேன். துணியைப் பயன்படுத்தாதவர் இட்லி குழியில் கொஞ்சம் எண்ணெய் தடவிக்கொள்ளவும்
  8. இப்போது இட்லிக் குழிகளில் மாவை ஊற்றி 10 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்
  9. இதைச் செய்ததும், குழிகளில் இருந்து எடுத்துக்கொள்ளவும்.
  10. பஞ்சுபோன்ற இரட்டை தானிய இட்லி தக்காளி சட்னி, தேங்காய் சட்னி சாம்பாருடன் பரிமாறத் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்