Photo of Adai by Sujata Shukla at BetterButter
1132
32
0.0(0)
0

அடை

Sep-05-2015
Sujata Shukla
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
180 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இட்லி அரிசி 1 கப்
  2. பச்சரிசி 1 கப்
  3. கடலை பருப்பு 1/2 கப்
  4. துவரம் பருப்பு 1/4 கப்
  5. உளுந்து 2 தேக்கரண்டி
  6. பாசிப்பயிர் 2 தேக்கரண்டி
  7. காய்ந்த மிளகாய் 5-8
  8. பெருங்காயம்/ஹிங் 1/8 தேக்கரண்டி
  9. புத்தம்புதிய தேங்காய் சிறிய அளவில் மெல்லியத் துண்டுகள் - 2 தேக்கரண்டி
  10. வெங்காயம் (சாம்பார் வெங்காயம்) அரைக்கப்பட்டது 1/2 கப்
  11. கறிவேப்பிலை அரைக்கப்பட்டது 2 தேக்கரண்டி
  12. உப்பு சுவைக்கேற்றபடி
  13. நல்லெண்ணெய் கடாயில் வறுப்பதற்கு

வழிமுறைகள்

  1. இந்த உணவைச் செய்வதற்க 20 நிமிடங்கள் ஆகும், மற்ற நேரங்கள் அரிசி பருப்புகள் ஊறுவதற்கும் நொதிப்பதற்கும் தேவைப்படும்.
  2. பச்சரிசியையும் இட்லி அரிசியையும் கழுவி ஒன்றாக 2 மணி நேரங்களுக்கு ஊறவைப்பதற்கு எடுத்துவைக்கவும்.
  3. பருப்புகளைக் கழுவி ஒன்றாக 2 மணி நேரங்களுக்கு ஊறவைக்க எடுதது வைக்கவும்.
  4. 2 மணி நேரத்திற்குப் பிறகு, சேர்வைப்பொருள்களை மாவாக தயாரிப்பதற்க அரைக்கும் வேலையைத் துவங்கவும்.
  5. கிரைண்டரில்/மிக்சரில் அல்லது உணவு பிராசசரில் சிவப்பு மிளகாயை (தண்டுகளை நீக்கியபிறகு) பெருங்காயம் கொஞ்சம் உப்புடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். நான் 5 மிளகாய் பயன்படுத்தினேன், மிளகாயின் காரத்திற்கேற்றப்படியும் உங்கள் ருசிக்கேற்றப்படியும் அதிகமாகவோ குறைவாகவோ நீங்கள் பயன்படுத்தலாம்.
  6. வடிகட்டிவிட்டு அரிசியைச் சேர்த்து கரடுமுரடான சாந்தாக தயாரிப்பதற்குத் தேவையான தண்ணீர் கொஞ்சம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும், அரிசி சமோலினா (சிரோட்டி ரவா) போல் வருவதற்காக. மிக்சியிலிருந்து அரைத்த மாவை எடுத்துக்கொள்ளவும்.
  7. பருப்புகளை வடிகட்டி கரடுமுரடான சாந்தாக அரைத்துக்கொள்ளவும். மிக்சியிலிருந்து எடுத்து அரைத்த மாவையும் பருப்புகளையும் ஒன்றாகக் கலக்கவும், அடைக்கான மாவாக வருவதற்கு.
  8. மாவை மூடி 3-4 மணி நேரங்களுக்கு நொதிக்கவிடவும். நான் 3 மணி நேரங்கள் நொதிக்கவிட்டேன், இந்த நிலையில் அடையை சமைக்கும்போது இருக்கவேண்டிய ருசிக்காக.
  9. நான் செய்ததுபோல் மறுநாள் காலை உணவுக்காக மாவை நீங்கள் தயார் செய்தால், முந்தைய நாள் மாலையில் 3-4 மணி நேரங்கள் அது நொதித்தபிறகு மூடி பிரிட்ஜில் எடுத்து வைக்கவும்.
  10. அடையைத் தயாரிக்க: பிரிட்ஜிலிருந்து மாவை எடுத்துக்கொள்ளவும், அறையின் வெப்ப நிலைக்கு வரட்டும்.
  11. இதற்கிடையில் வெங்காயம், கறிவேப்பிலையை அரைத்துக்கொள்ளவும், புத்தம்புதிய தேங்காய் துண்டுகளைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அடை மாவை கலந்துகொள்ளவும், சுவைக்கேற்றபடி உப்பு சேர்த்துக்கொள்ளவும், அரைக்கும்போது உப்பு சேர்க்கப்பட்டது ஞாபகம் இருக்கட்டும்.
  12. தோசைக்கல்லை சூடுபடுத்திக்கொள்க. கல் சரியாக சூடாகிவிட்டால், தீயை அடக்கி, ஒரு கரண்டி நல்லெண்ணையைச் சேர்த்துக்கொள்ளவும். மற்ற எண்ணெய்களையும் சேர்த்துக்கொள்ளலாம், ஆனால் நல்லெண்ணை நல்ல ருசி கொடுக்கும்.
  13. ஒரு பெரிய கரண்டி மாவை தோசைக்கல்லில் ஊற்றி கரண்டியின் பின்பக்கத்தால் தோசை/பேன்கேக் போல பரவச்செய்யவும். என் அம்மா அடையின் சுற்றுவட்ட விளிம்பில் ஓரிடத்தில், சிறிதாக வெட்டி அதில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றுவார்.
  14. அடை செய்யும்போது தோசைக்கல் சூடாக இருந்தால் ஒரு பக்கம் வேகுவதற்கு 2 நிமிடங்கள் ஆகும். அடையின் விளிம்பை கவனமாகத் தூக்கி ஆரஞ்சு சிவப்பிற்கு வந்துள்ளதாக என்று சரிபார்த்தபிறகு அடையைத் திருப்பிப்போடவும்.
  15. சில துளிகள் எண்ணெயை விளிம்புகளில் விட்டு, 1.5ல் இருந்து 2 நிமிடங்களுக்குப் பிறகு எடுத்துவிடவும்.
  16. வெல்லத்துண்டுகள், மிளகாய்ப்பொடி (தோசை மிளகாய்ப்பொடி/கன் பவுடர்), உப்பிடப்படாத வெண்ணெய்த்துண்டுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்