வீடு / சமையல் குறிப்பு / எப்போதைக்கும் சிறப்பான சாக்லேட் கப்கேக்குகள்

Photo of Best Ever Chocolate Cupcakes by BetterButter Editorial at BetterButter
1207
145
4.6(0)
0

எப்போதைக்கும் சிறப்பான சாக்லேட் கப்கேக்குகள்

Sep-30-2016
BetterButter Editorial
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • அமெரிக்கன்
  • பேக்கிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 1/2 கப் கொகோ பவுடர்
  2. 1 கப் கொதிக்கும் தண்ணீர்
  3. 1 1/3 கப் மைதா
  4. 1 1/2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  5. 1/4 தேக்கரண்டி உப்பு
  6. 100 கிராம் வெண்ணெய், அறை வெப்பத்தில்
  7. 1 கப் வெள்ளைச் சர்க்கரை குருணை
  8. 2 பெரிய முட்டை
  9. 2 தேக்கரண்டி சுத்தமான வெண்ணிலா எசென்ஸ்
  10. ஒரு சிட்டிகை உப்பு
  11. உறைபனி உருவாக்குவதற்கு (குளிர்ந்த சாக்லேட் கனேஷி)
  12. 200 கிராம் சாக்லேட்
  13. 150 மிலி கிரீம்
  14. 1/2 தேக்கரண்டி வெண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு சிறிய கிண்ணத்தில் கொதிக்கும் தண்ணீர், கொகோ பவுடரை மென்மையாகும்வரை கலந்துகொள்ளவும். அறையின் வெப்பத்தில் ஆறட்டும். இன்னொரு பாத்திரத்தில் மாவையும், பேக்கிங் பவுடரையும், உப்பையும் அளந்து சேர்த்துக்கொள்க.
  2. வெண்ணெய், சர்க்கரையை மென்மையாக பஞ்சுபோல் வரும்வரை அடித்து, முட்டைகளை ஒரு நேரத்தில் ஒன்றாகச் சேர்த்து மென்மையாகும்வரை அடித்துக்கொள்ளவும். தேவைப்பட்டால் பாத்திரத்தின் பக்கங்களைச் சுரண்டிக்கொள்க. வெண்ணிலா எசென்சை அடித்து மாவுக் கலவையைச்சேர்த்து ஒன்றாக கலக்கும் வரை கலந்துகொள்ளவும்.
  3. அதன்பின்னர் குளிர்விக்கப்பட்ட கொகோ கலவையைச் சேர்த்து மென்மையாகும்வரை கலந்துகொள்க. ஒவ்வொரு மஃபின் கப்பிலும் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு மாவால் நிரப்பி 180 டிகிரி cயில் 20 நிமிடங்கள் பேக் செய்யவும். உறையவைப்பதற்கு முன் ஆறவிடவும்.
  4. உறைபனி உருவாக்கத்திற்கு - கிரீமை கொதிக்கவைத்து சாக்லேட் சேர்த்து கனேசியைத் தயாரித்துக்கொள்க. வெண்ணையைச் சேர்த்து பளபளப்பாகும்வரை கலக்கவும். இந்தக் கலவை 3-4 மணி நேரம் குளிர்விக்கப்படட்டும்.
  5. குளிர்விக்கப்பட்டதும், கை மிக்சரைப் பயன்படுத்தி கனேசியை பஞ்சுபோல் அடித்துக்கொள்ளவும். இதை ஒரு பைப்பின் பையில் போட்டு கேக் கப்பில் பிழியவும். கன்பெட்டியை உங்கள் விருப்பப்படி தெளித்துக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்