வீடு / சமையல் குறிப்பு / சீன உலர் மஞ்சூரியன் உருண்டைகள் (வெங்காயமில்லை, பூண்டு இல்லை)

Photo of Chinese Dry Manchurian balls (No onion, No garlic) by Dhara Shah at BetterButter
39946
486
4.5(0)
3

சீன உலர் மஞ்சூரியன் உருண்டைகள் (வெங்காயமில்லை, பூண்டு இல்லை)

Nov-16-2016
Dhara Shah
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • சைனீஸ்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மஞ்சூரியன் உருண்டைகளுக்கானப் பொருள்கள்:
  2. 1 கப் உதிர்த்த முட்டைக்கோஸ்
  3. 1/4 கப் துருவிய கேரட்
  4. 1 தேக்கரண்டி துருவிய இஞ்சி
  5. 1 தேக்கரண்டி சோயா சாஸ்
  6. 1 தேக்கரண்டி உப்பு
  7. 2 தேக்கரண்டி மைதா
  8. 1 தேக்கரண்டி சோள மாவு
  9. பொரிப்பதற்கு எண்ணெய்
  10. குழம்புக்கு:
  11. 1 தேக்கரண்டி எண்ணெய்
  12. 1 கப் பொடியாக நறுக்கிய சிவப்பு, பச்சை, மஞ்சள் மணி மிளகு
  13. 1/4 கப் பொடியாக நறுக்கப்பட்ட பிரெஞ்ச் பீன்ஸ்
  14. 1/4 கப் பொடியாக நறுக்கிய கேரட்
  15. 2 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
  16. 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி
  17. சுவைக்கேற்ற உப்பு
  18. 1 தேக்கரண்டி சோயா சாஸ்
  19. 2 தேக்கரண்டி தக்காளி கெச்சப்
  20. 1 தேக்கரண்டி சர்க்கரை
  21. 3 தேக்கரண்டி தண்ணீர்
  22. 1 தேக்கரண்டி சோள மாவு குழம்பு
  23. அலங்கரிப்பதற்காக கொத்துமல்லி இலைகள்

வழிமுறைகள்

  1. மஞ்சூரியன் உருண்டை தயாரிப்பு:
  2. ஒரு கலவைப் பாத்திரத்தில் அனைத்துப் பொருள்களையும் கலந்து உருண்டை பிடித்துக்கொள்ளவும். அதன்பின்னர் உலர் நிலையில் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. குழம்பு தயாரிப்பு:
  4. ஒரு சாஸ் பாத்திரத்தில், எண்ணெயைச் சூடுபடுத்தி அனைத்து உலர் பொருள்களையும் சேர்த்துக்கொள்ளவும். பின்னர் அவற்றை நன்றாகக் கலந்து 2 நிமிடங்கள் வேகவைக்கவும். இப்போது தண்ணீரை ஊற்றி மேலும் 2 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  5. இபபோது சோள மாவுக் குழம்பைச் சேர்த்து அது அடர்த்தியாகும்வரை கலக்கவும். அதன்பின்னர் தயாரித்து வைத்துள்ள மஞ்சூரியன் உருண்டைகளைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  6. அடுப்பிலிருந்து எடுத்து கொத்துமல்லி இலைகளால் அலங்கரித்துக்கொள்ளவும். இரவு உணக்காகச் சூடாகப் பரிமாறவும்!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்