வீடு / சமையல் குறிப்பு / தக்காளி ரசம்

Photo of Tomato rasam by Sujata Limbu at BetterButter
7880
122
4.0(0)
0

தக்காளி ரசம்

Sep-17-2015
Sujata Limbu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. 9 நடுத்தர அளவுள்ள தக்காளி
  2. 2 கப் தண்ணீர்
  3. கையளவு கொத்துமல்லி இலைகள் நன்றாக நறுக்கப்பட்டது அலங்கரிப்பதற்காக
  4. சுவைக்கேற்ற உப்பு
  5. சாந்து சேர்வைப்பொருள்கள்:
  6. 1 தேக்கரண்டி சீரகம்
  7. 10 துண்டு மிளகு
  8. இஞ்சி 1 இன்ச் துண்டு
  9. 8 பூண்டுப்பல்
  10. தாளிப்புச் சேர்வைப்பொருள்கள்:
  11. 1 தேக்கரண்டி கடுகு
  12. 1 தேக்கரண்டு உளுத்தம்பருப்பு
  13. 2 காய்ந்த மிளகாய்
  14. 3 கொத்து கறிவேப்பிலை
  15. ½ தேக்கரண்டி மஞ்சள் தூள்
  16. ஒரு சிட்டிகை பெருங்காயம்
  17. 2 தேக்கரண்டி எண்ணெய்

வழிமுறைகள்

  1. தக்காளியைக் கழுவி தண்ணீர்விட்டு வேகவைக்கவும்.
  2. வெந்ததும், அவற்றை பொடியாக நறுக்கி கிரைண்டரில் அரைத்துக்கொள்ளவும். மென்மையானச் சந்தாகத் தயாரிக்க நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  3. அடுத்து, கிரைண்டரில் பட்டியலிடப்பட்ட மசாலா சேர்வைப்பொருள்களைச் சேர்த்துக் கரடுமுரடானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு கடாயை எடுத்து, அதில் எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகைப் போடவும். பொறிந்ததும் உளுத்தம்பருப்பைச் சேர்த்து வறுக்கவும்.
  5. பருப்பைப் பொன்னிறமாக மாறும்வரை வறுக்கவும். அடுத்து, அனைத்து தாளிப்புப்பொருள்களையும் சேர்க்கவும், மஞ்சள் தூளைத் தவிர.
  6. நன்றாகக் கலந்து ஒரு நிமிடம் வறுக்கவும்.பிறகு மஞ்சள்தூளுடன் மசாலா சாந்தைச் சேர்க்கவும். கலக்கி வறுத்து, 1 நிமிடத்திற்கு அல்லது அதற்கும்மேல் வேகவைக்கவும்.
  7. இறுதியாக தக்காளிச்சாந்தை தண்ணீரோடு ஊற்றி சுவைக்கு ஏற்றபடி உப்பை சரிசெய்துகொள்ளவும்.
  8. தீயை அடக்கி சிம்மில் மேலும் 10-11 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  9. கொதி நிலைக்குக் கொண்டுவந்து அந்தப் பதத்தை அடைந்ததும், அடுப்பை நிறுத்திவிட்டு கொத்துமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.
  10. தக்காளி ரசத்தோடு சுற்றிலும் சாதம் வைத்து சிறப்பான ருசிக்குப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்