வீடு / சமையல் குறிப்பு / காஷ்மீரத்து தயிர் கத்தரிக்காய்

Photo of Kashmiri Dahi baigan by Anjana Chaturvedi at BetterButter
2947
382
4.7(0)
1

காஷ்மீரத்து தயிர் கத்தரிக்காய்

Sep-26-2015
Anjana Chaturvedi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • ஜம்மு காஷ்மீர்
  • மெயின் டிஷ்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 500 கிராம் - கத்தரிக்காய்
  2. 2 கப் - தயிர்
  3. 1 தேக்கரண்டி - பெருஞ்சீரகம் நசுக்கியது
  4. 1.5 தேக்கரண்டி - இஞ்சித்தூள்
  5. 4 பச்சை ஏலக்காய்
  6. 1.5 தேக்கரண்டி - காஷ்மீர் மிளகாய்த் தூள்
  7. 3 தேக்கரண்டி - கடுகு
  8. 2 தேக்கரண்டி - தண்ணீர்
  9. 1/3 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
  10. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  11. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. கத்தரிக்காயைக் கழுவித் துடைத்து, நடுத்தர துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெயைச் சூடுபடுத்தி கத்தரிக்காய் துண்டுகளை மிதமானச் சூட்டில் பொரித்துககொள்ளவும்.
  3. பொன்னிறமாக மாறும்வரை பொரித்துக்கொள்க.
  4. வறுத்த கத்தரிக்காயை ஒரு பேப்பர் நாப்கினில் கூடுதல் எண்ணெயை உறிஞ்சுவதற்காக வடிக்கட்டவும்.
  5. ஒரு கனமான அகலமான சமையல் பாத்திரத்தில் கடுகு எண்ணெயைச் சேர்க்கவும்.
  6. அனைத்து உலர் மசாலாக்களையும் 2 தேக்கரண்டி தண்ணீரோடு கலந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  7. பச்சை ஏலக்காய் பெருங்காயத்தை சூடான எண்ணெயில் சேர்த்து ஏலக்காய் வெடிக்க ஆரம்பித்ததும் மசாலாக் கலவையை அதனுள் சேர்க்கவும்.
  8. ஒரு கலக்கு கலக்கி கடைத்த தயிரை சேர்க்கவும்.
  9. கட்டிப்போகாமல் இருக்கத் தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருக்கவும்.
  10. கொதிக்க ஆரம்பித்ததும் வறுத்த கத்தரிக்காய்த் துண்டுகளைச் சேர்க்கவும்.
  11. மிதமானச் சூட்டில் 5-6 நிமிடங்கள் சமைக்கவும்.
  12. அடர்த்தியாக ஆரம்பிக்கும்போது கத்தரிக்காய் மிருதுவாக இருந்தால், அது வெந்துவிட்டது.
  13. ரொட்டி அல்லது சாதத்தோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்