வீடு / சமையல் குறிப்பு / ஃப்யூஷன் புலாவ்

Photo of Fusion Pulao by Preethi Prasad at BetterButter
2632
120
4.7(0)
2

ஃப்யூஷன் புலாவ்

Sep-27-2015
Preethi Prasad
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
120 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 கப் - பாஸ்மதி அரிசி (நீள் தானியம்)
  2. 1 கப் - சீமைத்தினை
  3. 10-12 பன்னீர் கனசதுரத் துண்டுகள் (நடுத்தர அளவு)
  4. 15 - பிரெஞ்ச் பீன்ஸ் (பிளக்கப்பட்டு நறுக்கப்பட்டது)
  5. 2 - வெங்காயம் (பொடியாக நறுக்கப்பட்டது)
  6. 1-கேரட் (நறுக்கப்பட்டது)
  7. 2-உருளைக்கிழங்கு (நடுத்தர அளவு கனசதுரமாக நறுக்கப்பட்டது)
  8. 1-பச்சை மணி மிளகு பொடியாக்கப்பட்டது
  9. 1 தேக்கரண்டி - இஞ்சி விழுது
  10. 1 தேக்கரண்டி - பூண்டு விழுது
  11. 1/2 தேக்கரண்டி - மஞ்சள் தூள்
  12. 1 தேக்கரண்டி - சீரகம்
  13. 1 தேக்கரண்டி - சிவப்பு மிளகாய்த் தூள்
  14. 1 தேக்கரண்டி - கரம் மசாலா தூள்
  15. 1 தேக்கரண்டி - சப்ஜி மசாலா
  16. 2 தேக்கரண்டி எண்ணெய்
  17. 1 இன்ச் இலவங்கப்பட்டை
  18. 4-5 மிளகு
  19. 1 பிரிஞ்சி இலை
  20. 1 தேக்கரண்டி ஆசார் (ஊறுகாய்) மசாலா
  21. புத்தம்புதிய கொத்துமல்லி பொடியாக நறுக்கப்பட்டது
  22. புத்தம்புதிய கொத்துமல்லி அலங்கரிப்பதற்கு
  23. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசியையும் சீமைத்தினையையும் 1 மணி நேரத்திற்கு ஊறவைத்து பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்.
  2. உப்பு சேர்த்து பன்னீரையும் ஆச்சாரி மசாலாவையும் 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து மிதமானச் சூட்டில் வறுக்கவும். ஆச்சாரி மசாலாவை எடுத்து வைக்கவும்.
  3. ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெயைச் சூடுபடுத்தவும். சீரகம், பிரிஞ்சி இலை, மிளகு, மஞ்சள், இலவங்கப்பட்டை ஆகியவற்றைச் சேர்க்கவும். சில நொடிகள் வறுக்கவும்.
  4. வெங்காயம், இஞ்சி விழுது பூண்டு விழுதைச் சேர்த்து வெங்காயம் சற்றே பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.
  5. நறுக்கப்பட்ட அனைத்துக் காய்கறிகளையும், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து மிதமானச் சூட்டில் காய்கறிகள் நன்றாக வேகும்வரை வரை வைக்கவும். கருகாமல் பார்த்துக்கொள்ளவும்.
  6. கரம் மசாலா, சாப்ஜி மசாலா ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். 2 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  7. வேகவைத்த அரிசையும் சீமைத் தினையையும் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும், அப்போதுதான் மசாலா, காய்கறிகள், சாதம், சீமைத்தினை எல்லாம் ஒன்றோடு ஒன்று கலக்கும். தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.
  8. ஆச்சாரி பன்னீர், நறுக்கப்பட்ட கொத்துமல்லி ஆகியவற்றால் அலங்கரித்து பூந்தி ரைத்தா அல்லது உங்களுக்குப் பிடித்த எந்த ரைத்தாவோடும் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்