வீடு / சமையல் குறிப்பு / சோயா துண்டு பிரியாணி

Photo of Soya Chunk Biryani by Meena C R at BetterButter
2920
204
4.4(0)
0

சோயா துண்டு பிரியாணி

Sep-27-2015
Meena C R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
75 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • ஹைதராபாத்
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 35 - சோயா துண்டுகள்
  2. 200 கிராம் - பாஸ்மதி அரிசி
  3. 1 - தக்காளி 1/2யாக நறுக்கப்பட்டது
  4. 1 - வெங்காயம் பொடியாக நறுக்கப்பட்டது
  5. 3 தேக்கரண்டி . தயிர்
  6. 1 தேக்கரண்டி மஞ்சள்
  7. 1/2 தேக்கரண்டி - சிவப்பு மிளகாய்த் தூள்
  8. 8- பூண்டு
  9. 3 - பச்சை மிளகாய் பொடியாக நறுக்கப்பட்டது
  10. 20 - புதினா
  11. 3 தேக்கரண்டி - புதிய கொத்துமல்லி
  12. சுவைக்கு உப்பு
  13. தாளிப்புக்கு:
  14. 1 தேக்கரண்டி - வீட்டில் தயாரிக்கப்பட்ட நெய்
  15. 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
  16. 1 தேக்கரண்டி - சீரகம்
  17. 1 - கிராம்பு
  18. 1 - பிரிஞ்சி இலை
  19. 1 - பச்சை ஏலக்காய்

வழிமுறைகள்

  1. சோயா துண்டுகள் தயாரிப்பதற்கு: ஒரு பாத்திரத்தில் போதுமான தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். 1/4 தேக்கரண்டி உப்பு. கொதிக்க ஆரம்பித்ததும், சோயா துண்டுகளைச்சேர்க்கவும். ஒரு நிமிடத்திற்குப் பிறகு அடுப்பை நிறுத்தவும்.
  2. சோயா துண்டுகள் 5 நிமிடங்களுக்கு உறவைக்கவும். குளிர்ந்த நீரில் கழுவி மெதுவாக பிழிந்துகொள்ளவும். மீண்டும் கழுவி கூடுதல் தண்ணீரைப் பிழிந்து எடுத்துவிடவும். சோயா துண்டுகளைப் பயன்படுத்தத் தயார் நிலையில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. அரிசியைத் தயார் செய்வு: பாஸ்மதி அரிசியைக் கழுவி 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். அரிசியை விட இரட்டிப்பு மடங்கு தண்ணீர் இருக்கவேண்டும்.
  4. ஊறவைத்த பாஸ்மதி அரிசியையும் தண்ணீரையும் ஒரு நான் ஸ்டிக் கடாய்க்கு மாற்றி உயர் தீயில் வைக்கவும். தண்ணீர் கொதி வந்ததும், தீயை குறைத்துக்கொள்ளவும்.
  5. மெதுவாக அவற்றைச் சிறுசிறு துண்டுகளாகக் கிழித்தபின்னர் 5ல் இருந்து 6 புதினா இலைகளை சேர்க்கவும். 2 நிமிடங்களுக்கு மூடி வேகவைத்து, அடுப்பை நிறுத்தவும். பாஸ்மதி அரிசி அரைவேக்காட்டில் வெந்திருக்கவேண்டும்.
  6. வேறொரு நான் ஸ்டிக் கடாயில் சோயா துண்டு பிரியாணியைத் தயாரிக்க, எண்ணெயையும் நெய்யையும் சூடுபடத்திக்கொள்ளவும். சீரகம், கடலை பருப்பு, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சு இலை ஆகியவற்றைச் சேர்க்கவும். ஒரு நிமிடத்திற்கு வதக்கவும்.
  7. வெங்காயம் பூண்டு சேர்க்கவும். வெங்காயம் பளபளப்பாக ஆகும்வரை வதக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, சிவப்பு மிளகாய்த் தூள், உப்பு, தக்காளி ஆகியவற்றை சேர்க்கவும். நன்றாகக் கலந்து 2 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  8. தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கலவை சற்றே உலர் நிலைக்கு வந்ததும், ஊறவைத்த சோயா துண்டையும் 1/4 கப் தண்ணீரையும் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
  9. அரைவேக்காட்டு அரிசைய் சேர்த்து அரிசி உடையாமல் மெதுவாகக் கிண்டவும். மீதமுள்ள புதினா இலைகளைச் சேர்க்கவும். இவற்றையும் சிறிய துண்டுகளாகக் கிழித்துக்கொள்ளவும். மெதுவாகக் கலக்கவும்.
  10. பிரியாணியை கடாயில் பரவச் செய்து மூடி சிறு தீயில் முடிந்தளவு 3 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  11. 3 நிமிடங்களுக்குப் பிறகு, அரிசி வெந்துவிட்டதா என்று பார்க்கவும். இல்லையேல் மூடி ஒரு நிமிடம் வேகவைக்கவும்.
  12. அடுப்பை நிறுத்திவிட்டு பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்.
  13. நறுக்கப்பட்ட கொத்துமல்லியால் அலங்கரிக்கவும்.
  14. வெங்காய ரைத்தாவுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்