மசாலா சோயா சாப் | Masala Soya Chaap in Tamil

எழுதியவர் deepti sharma  |  28th Sep 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • மசாலா சோயா சாப், How to make மசாலா சோயா சாப்
மசாலா சோயா சாப்deepti sharma
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    60

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

183

0





மசாலா சோயா சாப் recipe

மசாலா சோயா சாப் தேவையான பொருட்கள் ( Ingredients to make Masala Soya Chaap in Tamil )

  • 7-8 சோயா சாப்
  • 1/2 கப் வடிக்கட்டிய தயிர்
  • 1 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
  • 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் சாந்து
  • 1 தேக்கரண்டி பச்சை மிளகாய்
  • உப்பு
  • 1 தேக்கரண்டி எண்ணெய் மேரினேட் செய்வதற்கு
  • 3 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 கப் நறுக்கப்பட்ட தக்காளி
  • 3/4 கப் நறுக்கப்பட்ட வெங்காயம்
  • 2 இன்ச் இஞ்சித் துருவல்
  • 1 தேக்கரண்டி சீரகத்தூள்
  • 2 கருப்பு ஏலக்காய்
  • 1/2 தேக்கரண்டி நாட்டு மிளகாய் (விருப்பம் சார்ந்தது)
  • 1/4 தேக்கரண்டி கரம் மசாலா
  • 1 தேக்கரண்டி மாம்பழத்தூள்

மசாலா சோயா சாப் செய்வது எப்படி | How to make Masala Soya Chaap in Tamil

  1. மேரினேட் செய்வதற்கு: தயிர், இஞ்சிப்பூண்டு விழுது, மிளகாய் சாந்து, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளவும். சோயா சாப் குச்சிகளில் கத்தியால் கீறவும்.
  2. இப்போது சோயா சாப்பை மேரினேட் செய்தக் கலவையோடு சேர்க்கவும். ஒரு தேக்கரண்டி எண்ணெயை அதனோடு ஊற்றி 1-2 மணி நேரத்திற்கு எடுத்து வைக்கவும் ) மேரினேட் செய்த சாப்பை பிரிஜ்ஜில் வைக்கலாம்)
  3. குழம்புக்கு ஒரு கடாயில் எண்ணையைச் சூடுபடுத்தி கருப்பு ஏலக்காயையும் சீரகத்தையும் சேர்த்து சமைக்கவும்.
  4. இப்போது பூண்டு, இஞ்சி சேர்க்கவும். ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு நறுக்கப்பட்ட வெங்காயத்தைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  5. வெங்காயம் பழுப்பானதும், தக்காளி, பச்சை மிளகாய்ச் சாந்து சேர்க்கவும். நன்றாகக் கலந்துகொள்ளவும். உயர் தீயில் ஒரு நிமிடத்திற்கு வேகவைத்து அதன்பின்னர் மசாலாக்களைச் சேர்க்கவும். சிவப்பு மிளகாய்த் தூள், (நாட்டு மிளகாயை இந்தச் சமயத்தில் சேர்க்கவும்) மாங்காய்த் தூள், மல்லித்தூளைச் சேர்க்கவும்.
  6. உயர் தீயில் எண்ணெய் பிரியும்வரை வேகவைக்கவும். உப்பு கரம் மசாலா சேர்த்து நன்றாகக் கலந்து வேகவைக்கவும்.
  7. குழம்பு ஏறக்குறையத் தயார். சோயா சாப்புடன் கொஞ்சம் வேகவைக்கவேண்டியுள்ளது. இப்போது மேரினேட் கலவையுடன் சாப்பை சேர்க்கவும். 5 நிமிடம்வரை வேகவைக்கவும்.
  8. சோய சாப் தயார். நான், பரான்தா அல்லது வெறுமனே வெங்காயம் மற்றும் புதினா சட்னியோடு நீங்கள் பரிமாறலாம்.

எனது டிப்:

சுவையாகவும் காரசாரமாகவும் தயாரிப்பதற்கு மாங்காய் ஊறுகாயைக்ஸகூட சேர்த்துக்கொள்ளலாம்

Reviews for Masala Soya Chaap in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.