வீடு / சமையல் குறிப்பு / கட்டா டோக்ளா

Photo of Khatta Dhokla by Bindiya Sharma at BetterButter
38227
630
4.6(0)
0

கட்டா டோக்ளா

Jul-15-2015
Bindiya Sharma
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • குஜராத்
  • ஸ்டீமிங்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 கப் அரிசி ( எந்த வகையானாலும் பரவாயில்லை)
  2. 1/2 கப் மிகவும் புளிப்பாக உள்ள தயிர்
  3. தேவையான அளவு தண்ணீர்
  4. சுவைக்கேற்ற அளவு உப்பு
  5. 1/2 தேக்கரண்டி புத்தம்புதிய எலுமிச்சை சாறு
  6. 1/4 கப் உளுந்து
  7. 1 தேக்கரண்டி ஈனோ பழ உப்பு (எலுமிச்சை)
  8. பச்சை மிளகாய் - 2
  9. இஞ்சி - 1 இன்ச் துண்டு
  10. ஒரு சிட்டிகை பெருங்காயம்
  11. 1/4 தேக்கரண்டி எண்ணெய்
  12. கொத்துமல்லியும் கூடுதலாகப் பிளந்து வைததுள்ள பச்சை மிளகாயும் அலங்கரிப்பதற்காக

வழிமுறைகள்

  1. அரிசியையும் உளுந்தையும் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து அலசி கிரைண்டரில் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு இஞ்சி, பச்சை மிளகாயோடுச் சேர்த்து அரைக்கவும். தயிர் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க.
  2. மூடி இரவு முழுவதும் நொதிக்கவிடவும்.
  3. இட்லி மாவு போல் அடர்த்தியாக இருக்கவேண்டும்.
  4. இப்போது உப்பு, எலுமிச்சை சாறு, பெருங்காயம் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  5. ஒரு தட்டையான அடிப்பாகமுள்ள குக்கரில் பொருந்தக்கூடிய ஒன்றில் குறைவாக எண்ணெய் தடவிக்கொள்ளவும். பிரஷர் குக்கரில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 6-8 நிமிடங்கள் சூடுபடுத்தவும்.
  6. ஈனோ பழ உப்பை கடைசி நிமிடத்தில் 1/4 தேக்கரண் எண்ணெயோடு சேர்த்து வேகமாகக் கலந்துகொள்ளவும்.
  7. எண்ணெய் தடவியப் பாத்திரத்தில் ஊற்றி ஃபாயிலால் இறுக்கமாக மூடவும்.
  8. பிரஷர் குக்கரின் விசில்களை நீக்கிவிட்டு பாத்திரத்தைக் கவனமாக உள்ளே வைக்கவும்.
  9. மூடியிட்டு 25 நிமிடங்கள் விசில் இல்லாமல் வேகவைக்கவும்.
  10. பிளந்த பச்சை மிளகாய், கொத்துமல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்