வீடு / சமையல் குறிப்பு / சேவை (சேமியா) உப்புமா

Photo of Sevai Upma by Anjana Chaturvedi at BetterButter
33880
558
4.5(0)
0

சேவை (சேமியா) உப்புமா

Sep-28-2015
Anjana Chaturvedi
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சேமியா - 1 கப்
  2. தண்ணீர் - 1 கப்
  3. பச்சைப் பட்டாணி வேகவைத்தது - 3 தேக்கரண்டி
  4. தக்காளி நறுக்கியது - 1
  5. இஞ்சி நறுக்கியது - 3/4 தேக்கரண்டி
  6. உப்பு - 1 தேக்கரண்டி
  7. எலுமிச்சை சாறு - 1.5 தேக்கரண்டி
  8. மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
  9. மஞ்சள் தூள் - 3/4 தேக்கரண்டி
  10. தாளிப்புக்கு:
  11. ரீபைண்டு எண்ணெய் - 1.5 தேக்கரண்டி
  12. கடுகு - 1 தேக்கரண்டி
  13. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  14. முந்திரி பருப்பு உடைத்தது - 1 தேக்கரண்டி (விருப்பம் சார்ந்தது)
  15. கறிவேப்பிலை - 6
  16. நறுக்கிய பச்சை மிளகாய் - 2

வழிமுறைகள்

  1. ஒரு கடாயைச் சூடுபடுத்தி கடுகு, உளுத்தம்பருப்பு, முந்திரி பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து மிதமானச் சூட்டில் வதக்கவும்.
  2. கடுகு பொரிய ஆரம்பித்ததுமே, நறுக்கிய பச்சை மிளகாய், சேமியாவை உடனே போட்டு சிறு தீயில் வதக்கவும்.
  3. கறிவேப்பிலை, வேகவைத்த பட்டாணி சேர்த்து சில நொடிகள் வறுக்கவும். உப்பு, மஞ்சள், மிளகாய்த் தூள், நறுக்கிய தக்காளி, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.
  4. ஒரு கப் தண்ணீர் ஊற்றி, ஒரு மூடியால் மூடி சிம்மில் 5-7 நிமிடங்கள் வைக்கவும். எலுமிச்சை சாறு, புதிய கொத்துமல்லி சேர்த்து மெதுவாகக் கிளறவும்.
  5. அடுப்பை நிறுத்திவிட்டு கடாயை மூடி சில நிமிடங்கள் விட்டுவைக்கவும். அப்படிச் செய்வதால் நறுமணத்தையும் கூடுதல் தண்ணீரையும் அது உறிஞ்சிவிடும். ( இருந்தால்)
  6. மூடியைத் திறந்து முள்கரண்டியால் மெதுவாகக் கிளறவும். சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்