வீடு / சமையல் குறிப்பு / வெந்தயம் கம்பு பூரி

Photo of Methi Bajra Poori by Anjana Chaturvedi at BetterButter
47363
795
4.7(0)
8

வெந்தயம் கம்பு பூரி

Sep-29-2015
Anjana Chaturvedi
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • குஜராத்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கம்பு மாவு - 1.5 கப்
  2. கோதுமை மாவு - 4 தேக்கரண்டி
  3. புதிய வெந்தயம் - 1 கப்
  4. வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 3/4 கப்
  5. தயிர் - 3 தேக்கரண்டி
  6. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
  7. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
  8. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  9. உப்பு - 1 தேக்கரண்டி
  10. சோடா பை கார்பனேட் - ஒரு சிட்டிகை
  11. ரீபைண்டு ஆயில் - பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. வெந்தயக் கீரையைக் கழுவி நறுக்கி, வேகவைத்த உருளைக்கிழங்குகளை மசித்துக்கொள்ளவும்.
  2. ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்து கம்பு மாவு மற்றும் எண்ணெயைத் தவிர்த்து மற்ற பொருள்கள் அனைத்தையும் சேர்த்துக்கொள்ளவும்.
  3. கலந்து நன்றாக மசித்து, சூடானத் தண்ணீர் கொஞ்சம் சேர்த்து (சிறிது சிறிதாக), நடுத்தர அளவில் மிருதுவான மாவைத் தயாரித்துக்கொள்ளவும். 4-5 நிமிடங்கள் நன்றாகப் பிசைந்துகொள்க. (அவற்றை வறுக்கத் தயாராக இருக்கும்போதும் மட்டும் இந்த மாவைத் தயாரிக்கவும்).
  4. சிறிய மாவு உருண்டைகளைத் தயாரித்து கோதுமை மாவு தூவி நடுத்தர அளவில் மொத்தமாக பூரிகளைத் தயாரித்துக்கொள்ளவும்.
  5. எண்ணெயைச் சூடுபடுத்தி இந்த பூரிகளை மிதமானச் சூட்டில் பொன்னிறமாக மாறும்வரை பொரிக்கவும்.
  6. ஒரு பேப்பர் தாளில் வடிக்கட்டி சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்