வீடு / சமையல் குறிப்பு / ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (ஒரு பிரஷர் குக்கரில்)

Photo of Hyderabadi Chicken Dum Biryani ( In a Pressure Cooker ) by sweta biswal at BetterButter
8428
370
4.6(0)
0

ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (ஒரு பிரஷர் குக்கரில்)

Oct-01-2015
sweta biswal
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈத்
  • ஆந்திரப்ரதேஷ்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 2 கப் பாஸ்மதி அரிசி
  2. 600 கிராம் சிக்கன் மார்பு (அல்லது உங்களுக்கு விருப்பம் இருந்தால் கால் பகுதி)
  3. 1 கப் தயிர்
  4. 1 தேக்கரண்டி சீரகம்
  5. 2 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
  6. 1 தேக்கரண்டி மல்லி
  7. 4 தேக்கரண்டி புதிய தக்காளி சாந்து
  8. 1 1/2 இன்ச் இலவங்கப்பட்டை
  9. 4 கிராம்பு
  10. 2 நட்சத்திர சோம்பு
  11. ஜாதிக்காயின் 1 சிறிய இதழ்
  12. 2 பச்சை ஏலக்காய்
  13. 2 சிட்டிகை ஜாதிக்காய்
  14. 1 பெரிய வெங்காயம்
  15. 4 தேக்கரண்டி எண்ணெய்
  16. 1/2 கப் பால்
  17. சிட்டிகை குங்குமப்பூ
  18. 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  19. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  20. சுவைக்கேற்ற உப்பு
  21. கையளவு புதினா இலை
  22. கையளவு கொத்துமல்லி

வழிமுறைகள்

  1. ஒரு கடாயைச் சூடுபடுத்துக. மல்லி, சீரகம் ஆகியவற்றை வேறு எதுவும் சேர்க்காமல் வறுத்து மென்மையான பவுடராக அரைத்துக்கொள்ளவும்.
  2. தயிரை அடித்து, சீரகம் - மல்லித் தூள், இஞ்சிப் பூண்டு விழுதி, மிளகாய்த் தூள், மஞ்சள், தக்காளி சாந்து, உப்பு, பொடி செய்யப்பட்ட இலவங்கப்பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, ஜாதிக்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும். அவற்றோடு சிக்கன் துண்டுகளைச் சேர்த்து 2 மணி நேரத்திற்கு மேரினேட் செய்யவும்.
  3. வெங்காயத்தை வளையங்களாக வெட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். குங்குமப்பூவை பாலில் ஊறவைக்கவும்.
  4. கடாயினைச் சூடுபடுத்துக. எண்ணெயைச் சேர்க்கவும். சூடானதும், புதினா இலைகள், கொத்துமல்லி, வெங்காய வளையங்கள் சேர்த்து கலந்து பளபளப்பாகும்வரை வறுக்கவும். மேரினேட் செய்த சிக்கன் துண்டுகளைச் சேர்தது 15-20 நிமிடங்கள் அல்லது சிக்கன் 80% வேகும்வரை வேகவைக்கவும்.
  5. அரிசியைக் கழுவி பிரஷர் குக்கரில் சேர்க்கவும். 2 கப் தண்ணீர், நசுக்கிய ஏலக்காய், ஜாதிக்காய், குங்குமப்பூ-பால் சிக்கன் துண்டுகளோடு சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். 1 தேக்கரண்டி நெய்யை இந்த நிலையில் சேர்க்கவும் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருப்பதற்கு.
  6. மூடியிட்டு மூடி 10 நிமிடங்கள் வேகவைக்கவும். அடுப்பிலிருந்து எடுத்து ஆவியை வெளியேறவிடவும். ரைத்தாவுடன் பரிமாறவும்.
  7. கொஞ்சம் வறுத்த/பொன்னிறமான வெங்காய வளையங்களோடு மேலே வைக்கவும், சிறப்பான ஒரு ருசிக்கா!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்