வீடு / சமையல் குறிப்பு / பருப்பு வறுவல்

Photo of Daal Fry by Ms. Falguni Kapadia at BetterButter
2044
376
4.5(0)
0

பருப்பு வறுவல்

Oct-06-2015
Ms. Falguni Kapadia
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • உ.பி
  • அக்கம்பனிமென்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1/2 கப் - துவரம் பருப்பு (அறை மணி நேரம் ஊறவைத்து வேகவைத்தது)
  2. தேவையான அளவு எண்ணெய்
  3. 1 தேக்கரண்டி - பெருங்காயம்
  4. 3 தேக்கரண்டி - நெய்
  5. 3 தேக்கரண்டி - பூண்டு (பொடியாக நறுக்கியது)
  6. 2 தேக்கரண்டி - இஞ்சி விழுது
  7. 3 - கிராம்பு
  8. 1 தேக்கரண்டி - பச்சை மிளகாய்ச் சாந்து
  9. 1 வெங்காயம் - பொடியாக நறுக்கியது
  10. 1 - தக்காளி (பொடியாக நறுக்கியது)
  11. 2 தேக்கரண்டி - சிவப்பு மிளகாய்த் தூள்
  12. 1/2 தேக்கரண்டி - மஞ்சள் தூள்
  13. 1 தேக்கரண்டி - கரம் மசாலா
  14. தாளிப்புக்கு:
  15. 2 தேக்கரண்டி - எண்ணெய்
  16. 1 தேக்கரண்டி - சீரகம்
  17. 2 தேக்கரண்டி - சிவப்பு மிளகாய்த் தூள்
  18. 3 - பச்சை மிளகாய் பிளந்தது
  19. 2 தேக்கரணடி - கொத்துமல்லி
  20. எலுமிச்சை சாறு பரிமாறும்போது

வழிமுறைகள்

  1. பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். போதுமானத் தண்ணீர், எண்ணெய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றை பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்.
  2. ஆறட்டும். ஒரு கடாயில் நெய், எண்ணெயைச் சூடுபடுத்துக. சீரகத்தையும் கிராம்பையும் பொரிய விடவும். வெடிக்க ஆரம்பித்ததும், வதக்கிய பூண்டோடு இஞ்சி விழுதைச் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து அது சற்றே வெளுக்கும்வரை வதக்கவும்.
  3. தக்காளித் துருவலைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  4. சிவப்பு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சாந்தைச் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
  5. இப்போது வேகவைத்த பருப்பைச் சேர்த்து நன்றாக் கலந்து தேவையென்றால் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க.
  6. தாளிப்புக்கு: ஒரு சிறிய பாத்திரத்தில், எண்ணெயைச் சூடுபடுத்துக. கொஞ்சம் சீரகத்தை வெடிக்கவிடவும். வெடிக்க ஆரம்பித்ததும், அடுப்பை நிறுத்துவிட்டு சிவப்பு மிளகாய்த் தூளையும் பிளந்த மிளகாய் கொஞ்சமும் சேர்க்கவும்.
  7. தாளிப்பை பருப்பின் மீது சேர்க்கவும். நறுக்கிய கொத்துமல்லியால் அலங்கரிக்கவும்.
  8. எலுமிச்சை மற்றும் சூடான சீரக சாதத்தோடுச் சூடாகப்பரிமாறி உண்டு மகிழவும்!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்