வீடு / சமையல் குறிப்பு / பிரஷர் குக்கரில் கடுகு எண்ணெயில் சமைத்த மட்டன் குழம்பு

Photo of Pressure Cooker Mutton Curry Cooked in Mustard Oil by Soma Pradhan at BetterButter
1233
15
0.0(0)
0

பிரஷர் குக்கரில் கடுகு எண்ணெயில் சமைத்த மட்டன் குழம்பு

Oct-07-2015
Soma Pradhan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈத்
  • முகலாய்
  • மெயின் டிஷ்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 1 கிலோ - மட்டன் (சுத்தப்படுத்திக் கூடுதல் கொழுப்பு நீக்கப்பட்டது)
  2. 4 - நடுத்தர அளவுள்ள வெங்காயம்
  3. 2 - முழு பூண்டு பற்கள்
  4. 1 இன்ச் இஞ்சி
  5. 3ல் இருந்து 4 - பச்சை மிளகாய்
  6. 1 தேக்கரண்டி - மஞ்சள் தூள்
  7. 1 தேக்கரண்டி - சிவப்பு மிளகாய்த் தூள்
  8. 2 தேக்கரண்டி - கரம் மசாலா தூள்
  9. 7 - தக்காளி சாந்து
  10. கொத்துமல்லி இலைகள் அலங்கரிப்பதற்காக
  11. 4 தேக்கரண்டி - கடுகு
  12. சுவைக்கேற்ற உப்பு
  13. 1 தேக்கரண்டி - சர்க்கரை
  14. 1 இலவங்கப்பட்டை குச்சி
  15. 3ல் இருந்து 4 - பிரிஞ்சி இலை
  16. 2 - நட்சத்திர சோம்பு
  17. கொஞ்சம் பச்சை ஏலக்காய்
  18. 1 - கருப்பு ஏலக்காய்
  19. கொஞ்சம் முழு கருமிளகு
  20. உருளைக்கிழங்கு - 2

வழிமுறைகள்

  1. வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை அரைத்துக்கொள்க.
  2. தக்காளியை சாந்தாக அரைத்துக்கொள்க.
  3. ஒரு பிரஷர் குக்கரில் உயர் தீயில் கடுகு எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்க.
  4. புகையும் நிலைக்கு வந்ததும், தீயை அடக்கிவிட்டு ஒட்டுமொத்த மசாலாக்களையும் சேர்க்கவும்.
  5. வெங்காயச் சாந்து சேர்த்து சிறு தீயிலிருந்து உயர் தீ வரைக்கும் பொன்னிறமாகும்வரை சமைக்கவும்.
  6. அடுத்து தக்காளி சாந்து சேர்த்து 7ல் இருந்து 8 நிமிடங்கள் தக்காளியின் பச்சை வாடை போகும்வரை சமைக்கவும்.
  7. சிவப்பு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள் சேர்க்கவும்.
  8. நன்றாகக் கலந்துகொள்ளவும். இந்த சமயத்தில் குழம்பு நன்றாக சமைக்கப்பட்டிருக்கவேண்டும்.
  9. மட்டனைச் சேர்ப்பதற்கு இதுதான் சமயம், மட்டன் மசாலாக்களோடு நன்றாக வேகும்வரை வரைக்கும் கலக்கவும்.
  10. 2 கப் தண்ணீர், சுவைக்கேற்ற உப்பு சேர்க்கவும் (கிட்டத்தட்ட் 2 தேக்கரண்டி உப்பு போதுமானது).
  11. தோலோடு உருளைக்கிழங்கைப் போடவும். மட்டனோடு உருளைக்கிழங்கு உங்களுக்குப் பிடிக்கும் என்றால்.
  12. பிரஷர் குக்கரில் மூடியைப் போட்டு உயர் தீயில் 20 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  13. அடுப்பை நிறுத்திவிட்டு பிரஷர் குறையட்டும். மட்டனை சோதிக்கவும். பிரஷர் குக்கரில் பெரும்பாலும் 20 நிமிடம் போது மட்டம் வேகுவதற்கு. ஆட்டுக்குட்டியை நீங்கள் பயன்படுத்தினால், 15 நிமிடங்களில் வெந்துவிடும். சில வயதான ஆடுகளுக்கு 30 நிமிடங்கள் தேவைப்படும், வேகுவதற்கு.
  14. கொத்துமல்லியால் அலங்கரிக்கவும், இதை அதிகம் பயன்படுத்தி சாதத்தோடு பரிமாறவும்.
  15. எலுமிச்சை சாறைப் பிழிந்துவிட்டு ஆவி பறக்கும் மட்டனை குக்கரிலிருந்தே நேரடியாக எடுத்து உண்டு மகிழவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்