வீடு / சமையல் குறிப்பு / உடனடி ரவா ஆப்பம்

Photo of Instant Rava Appam by Vama Dattani at BetterButter
1838
87
4.7(0)
0

உடனடி ரவா ஆப்பம்

Oct-09-2015
Vama Dattani
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ஸ்நேக்ஸ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 கப் - ரவை
  2. 1 - வெங்காயம்
  3. 3ல் இருந்து 4 தேக்கரண்டி - தயிர் அல்லது 1 கப் - மோர்
  4. 1 தேக்கரண்டி - எண்ணெய் + கடாய்க்கான எண்ணெயும்
  5. 1/4 தேக்கரண்டி - கடுகு
  6. 1/4 தேக்கரண்டி - உளுந்து
  7. 4ல் இருந்து 5 - கறிவேப்பிலை
  8. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தவும். கடுகையும் கரிவேப்பிலையையும் சேர்த்து வெடிக்கவைக்கவும். அதன்பின்னர் உளுந்து சேர்த்து பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.
  2. இப்போது பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம் சேர்த்து கொஞ்சம் உப்பு தூவி வெங்காயம் பளபளப்பாகும்வரை வதக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் ரவையை எடுத்து கொஞ்சம் தயிர் அல்லது மோரை சேர்க்கவும்.
  4. தயிரை நீங்கள் சேர்த்திருநதால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்குச் செய்துகொள்ளவும்.
  5. இப்போது வெங்காயக் கலவையைக் கலந்து 15 நிமிடங்கள் எடுத்து வைக்கவும்.
  6. ஆப்பப் பாத்திரத்தைச் சூடுபடுத்தி ஒவ்வொரு குழியிலும் ஒரு துளி எண்ணெய் விடவும்.
  7. எண்ணெய் போதுமான அளவிற்குச் சூடானதும் ஒரு முழு கரண்டி ரவைக் கலவையை ஒவ்வொரு ஆப்பச் சட்டிக் குழியிலும் இடவும்.
  8. பாத்திரத்தை ஒரு தட்டால் அல்லது மூடியால் மூடி 2-3 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  9. கரண்டியால் ஆப்பத்தைத் திருப்பி மேலும் 2 நிமிடம் வேகவைக்கவும். உடனடி ரவா ஆப்பம்/ஆப்பம்/பணியாரம் தயார். வேர்கடை மற்றும் கொத்துமல்லி சட்னியோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்