வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு பீசா

Photo of Potato Pizza by Ishika Thakur at BetterButter
3857
1395
4.5(0)
0

உருளைக்கிழங்கு பீசா

Oct-09-2015
Ishika Thakur
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அடித்தளத்திற்கு: 2 பெரிய உருளைக்கிழங்குகள்
  2. 1 தேக்கரண்டி - மூலிகைக் கலவை
  3. சுவைக்கேற்ற உப்பு
  4. எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
  5. மேலே அலங்கரிப்பதற்கு: 1 - கேரட் துருவல்
  6. 1/2 - பச்சை குடமிளகாய் பொடியாக நறுக்கியது
  7. பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
  8. சுவைக்கேற்ற உப்பு
  9. 3 தேக்கரண்டி - துருவில் பதப்படுத்தப்பட்ட வெண்ணெய்
  10. பீசா சாஸ் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேகவைத்து அவை ஆறியதும் தோலை உரித்து மொத்தமான வட்டத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. இந்த உருளைக்கிழங்கு வட்டத் துண்டுகளை கலவை மூலிகை, உப்பு, எலுமிச்சை சாறோடு குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் மேரினேட் செய்யவும்.
  3. ஒரு நான் ஸ்டிக் கடாயில் அல்லது தவாவில் சிறிது எண்ணெய் தடவி வறுத்துக்கொள்ளவும். இரண்டு பக்கமும் சிறு தீயில் சற்றே வறுத்துக்கொள்ளவும்.
  4. ஒரு தனி பாத்திரத்தில் அனைத்து டாப்பிங் பொருள்களையும், வெண்ணெயைத் தவிர கலந்துகொள்ளவும். காய்கறிகள் வேகும்வரை சிறிது எண்ணெயை கடாயில் ஊற்றி வதக்கவும்.
  5. பீசா தயாரிப்பதற்கு. வறுத்த உருளைக்கிழங்கு வட்டவடிவத் துண்டுகளில் டாப்பிங் கலவையை வைத்து மூடி 5 நிமிடங்கள் வேகவைக்கவும். அதன்பின்னர் திறந்து தட்டையான ஒரு கரண்டியால் டாப்பிங்கை மெதுவாக அழுத்தவும். அது முறையாக ஒட்டவேண்டும்.
  6. துருவிய வெண்ணெயை ஒவ்வொன்றிலும் தூவி மீண்டும் மூடி 2 நிமிடங்களுக்கு அல்லது வெண்ணெய் உருகும்வரை சமைக்கவும். இது இப்போது பரிமாறத் தயார்.
  7. டிபினுக்கு ஒரு நேர்த்தியான சிற்றுண்டி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்