வீடு / சமையல் குறிப்பு / எள்ளு சாதம்

Photo of Sesame (Til) Rice by Krithika Chandrasekaran at BetterButter
1364
20
0.0(0)
0

எள்ளு சாதம்

Oct-15-2015
Krithika Chandrasekaran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி - 1 கப்
  2. வெள்ளை எள்ளு - 1/2 கப்
  3. பச்சை மிளகாய் - 2
  4. காய்ந்த மிளகாய் - 2
  5. நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
  6. நெய் - 1 தேக்கரண்டி
  7. உளுந்து - 1 தேக்கரண்டி
  8. கடுகு - 1/2 தேக்கரண்டி
  9. கொண்டைக்கடலை - 1/2 தேக்கரண்டி
  10. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
  11. கறிவேப்பிலை - கொஞ்சம்
  12. உப்பு சுவைக்கு

வழிமுறைகள்

  1. குறைவான வெப்பத்தில் கடாயை சூடுபடுத்தி, வறுத்த எள்ளை பொன்னிறமாகும் வரை வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்க.
  2. 2 கப் தண்ணீர் விட்டு அரிசியை வேகவைத்துக்கொள்க. குழைய சமைத்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும். செய்து முடித்ததும் உடனே ஒட்டிக்கொள்ளாமல் இருக்க ஒரு தட்டில் பரவவிடவும்.
  3. அதே கடாயில் 1/4 தேக்கரண்டி எண்ணெயை சூடுபடுத்திக்கொண்டு, உளுந்த, சிவப்பு மிளகாய் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வறுத்துக்கொள்க. ஆறட்டும். ஒரு மிக்சரில் வறுத்த எள்ளுடன் கரடுமுரடாக வறுத்துக்கொள்க.
  4. நெய், கடுகு சேர்த்து ஒரு கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய்விட்டு சூடுபடுத்தவும். அது வெடிக்க ஆரம்பித்ததும், கொண்டைக்கடலை, பெருங்காயம், பிளந்த பச்சை மிளகாய், கறிவேப்பிலை இலைகளைச் சேர்த்துக்கொள்ளவும்.
  5. சமைத்த அரிசியில் சுவைக்கேற்ற உப்புடன் இவற்றையும் சேர்த்துக்கொள்க. இப்போது 1 தேக்கரண்டி அரைத்த கலவையைச் சேர்த்து சுவையை சரிபார்த்துக்கொள்க. தேவையானால் அதிகம் சேர்த்து கலந்துகொள்ளவும்.
  6. விருப்பத்திற்கேற்ப சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்