வீடு / சமையல் குறிப்பு / பிரெட் புட்டிங்

Photo of Bread Pudding by Sharon Dcosta at BetterButter
3810
319
4.6(0)
1

பிரெட் புட்டிங்

Oct-22-2015
Sharon Dcosta
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • ஐரோப்பிய
  • பிரெஷர் குக்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 6 பிரெட் லொஃப்கள்
  2. 1 முட்டை
  3. 6 தேக்கரண்டி - சர்க்கரை
  4. 3 கப் - பால்
  5. 4-5 துளிகள் - வெண்ணிலா எசென்ஸ்

வழிமுறைகள்

  1. 5 இன்ச் விட்டமுள்ள ஒரு அலுமினிய பேக்கிங் டின்னில் 1 தேக்கரண்டி சர்க்கரை எடுத்து சர்க்கரை உருகும்வரை அடுப்பில் சூடுபடுத்தவும்.
  2. சர்க்கரை கேரமலைஸ் ஆகும்வரை சூடுபடுத்திக்கொண்டே இருக்கவும் (பழுப்பு நிறத்தில் மாறும்) டின்னின் அடிப்பாகம் முழுவதும் பரப்புக. ஆறவிடுக.
  3. பிரெட்டின் கடின மேல் பகுதியை நீக்கி சிறுசிறு துண்டுகளாக கிழித்துக்கொள்க.
  4. ஒரு கிண்ணத்தில் பால், முட்டை, மீதமுள்ள சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ ஆகியவற்றைக் கலந்துகொள்க. பிரட் துண்டுகளை இந்தக் கலவையில் அரை மணி நேரத்திற்கு உறவைக்கவும்.
  5. ஒரு கரண்டியால் நன்றாகக் கலந்துகொள்க, அப்போதுதான் கட்டிகள் இருக்காது. தயாரித்து வைத்துள்ள டின்னில் கலவையை ஊற்றுக.
  6. ஒரு பிரஷர் குக்கரில் கிட்டத்தட்ட 1 இன்ச் அளவு தண்ணீர் நிரப்பு பேக்கிங் டின்னை அதன் மீது வைக்கவும். டின்னை ஒரு மூடியால் மூடி அதன் மேல் கணம் வைக்கவும். (பெரிய கல் நன்றாக இருக்கும்)
  7. 3 விசில்களுக்கு வேகவைத்து தீயை அடக்கி, பிரஷர் குக்கரில் 8-10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  8. எடுத்து சில்லென்று பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்