வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் புலாவ்

Photo of Vegetable Pulao by Sehej Mann at BetterButter
4468
393
4.3(0)
1

வெஜிடபிள் புலாவ்

Oct-29-2015
Sehej Mann
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • முகலாய்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 100 கிராம் பாஸ்மதி அரிசி
  2. 1 சிறிய அளவிலான வெங்காயம் பொடியாக நறுக்கப்பட்டது
  3. 1/2 கப் காய்கறி கலவை (பட்டாணி/கேரட்/தக்காளி/காளிபிளவர்)
  4. 1/2 தேக்கரண்டி சீரகத் தூள் (வறுத்தது)
  5. 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  6. 1/2 தேக்கரண்டி சீரகம்
  7. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  8. 750 மிலி தண்ணீர்
  9. 2 பிரிஞ்சி இலை
  10. 1 நட்சத்திர சோம்பு
  11. 2 கிராம்பு
  12. 1/2 இலவங்கப்பட்டை குச்சி
  13. 1 ஏலக்காய்
  14. 1 தேக்கரண்டி எண்ணெய்
  15. சுவைக்கேற்ற உப்பு
  16. மசாலா சேர்வைப்பொருள்கள்:
  17. 1 துண்டு இலவங்கப்பட்டை
  18. 1 துண்டு நட்சத்திர சோம்பு
  19. 2 கிராம்பு
  20. 4-5 மிளகு
  21. இலவங்கப்பட்டை ஒரு குச்சியில் பாதி

வழிமுறைகள்

  1. சமைப்பதற்கு முள் அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். அதன்பிறகு தண்ணீரும் மசாலாக்களும் - பிரிஞ்சி இலை, நட்சத்திர சோம்பு சிறிய துண்டு, 2 கிராம்பு, இலவங்கப்பட்டை, ஒரு ஏலக்காய் உள்ள ஒரு பாத்திரத்தில் அரிசியைப் போடவும். அது சிம்மில் வேகட்டும்.
  2. இதற்கிடையில், மசாலா சேர்வைப்பொருள்களை வேறு எதுவும் சேர்க்காமல் வறுத்து கரடுமுரடான பவுடராக அரைத்துக்கொள்ளவும்.
  3. சாதம் வெந்ததும், ஒரு தட்டில் சமமாகப் பரப்பி ஆறவிடவும்.
  4. காய்கறிகள் வேகட்டும், அவை மிருதுவாகவும் சற்றே கடிக்கும் பதத்திலும் வரும்வரை 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  5. ஒரு கடாயை எடுத்து எண்ணெயை ஊற்றவும், எண்ணெய் சூடானது சீரகத்தை அதனுள் போடவும். விதைகள் வெடிக்க ஆரம்பித்ததும், வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் கலக்கவும்.
  6. அதன்பின்னர் இஞ்சி-பூண்டு விழுதோடு 1/2 தேக்கரண்டி மட்டும் மசாலாக் கலவையைச் சேர்க்கவும். மேலும் வறுத்த சீரகத் தூள் கரம் மசாலாத் தூளையும் போடவும்.
  7. கலக்கி கலந்துகொள்ளவும். சுவைக்கேற்றபடி உப்பு சேர்த்தபின், காய்கறிகளைப் போட்டு 1-2 நிமிடங்கள் வதக்கி வேகவைக்கவும்.
  8. இறுதியாக சாதத்தைச் சேர்க்கவும். ஒரு மூடியால் மூடி மேலும் 2-3 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  9. உங்களுக்குப் பிடித்த சைவ அசைவ குழம்புடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்