வீடு / சமையல் குறிப்பு / ஆட்டிரைச்சி அன்னம்/ மட்டன் குழம்பு- ஆட்டிறைச்சி சுவையான தேங்காய்ப்பாலில் சமைக்கப்பட்டது[பிரஷர் குக்கர் முறை]

Photo of Aattu Erachi Anam/ Mutton Kuzhlambhu - Mutton cooked in Spicy Coconut Milk Gravy [Pressure Cooker Method] by Prachi Pawar at BetterButter
7852
76
0.0(0)
0

ஆட்டிரைச்சி அன்னம்/ மட்டன் குழம்பு- ஆட்டிறைச்சி சுவையான தேங்காய்ப்பாலில் சமைக்கப்பட்டது[பிரஷர் குக்கர் முறை]

Jul-20-2015
Prachi Pawar
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈத்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. ஆட்டிறைச்சி- 1 கிலோ
  2. வெங்காயம்- 3 நடுத்தர அளவிலானது மெலிதாக நறுக்கப்பட்டது
  3. பச்சை மிளகாய்- 4 துண்டு
  4. தக்காளி- 4 பெரிய அளவிலானது சன்னமாக நறுக்கப்பட்டது.
  5. புதினா/ மிண்ட் இலைகள் - கைப்படி அளவு
  6. கொத்தமல்லி - கைப்படி அளவு
  7. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  8. கரம் மசாலாத் தூள் - 2 தேக்கரண்டி
  9. தயில்- 1 கப்
  10. சிவப்பு மிளகாய் - 2 தேக்கரண்டி
  11. குழம்பு மிளகாய்த் தூள் / கரிவேப்பிலைத் தூள்- 5 தேக்கரண்டி குவியலாக
  12. உருளைக்கிழங்குகள் - 2 நடுத்தர அளவிலானது சீவப்பட்டது
  13. ராம்பி இலை / பந்தன் இலை- 1 இலை
  14. உப்பு - சுவைக்காக
  15. எண்ணெய் - 50 மிலி
  16. அறைக்க:
  17. தேங்காய் - 1/2
  18. வறுக்கப்பட்ட வெட்டிவேர்- 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஆட்டிறைச்சியை நன்றாகத் தண்ணீரில் கழுவிக்கொள்க. தண்ணீரை வடிகட்டிவிட்டு எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  2. ஆட்டிறைச்சித் துண்டுகளை பாதியாக நறுக்கப்பட்ட வெங்காயம், நறுக்கப்பட்ட புதினா, கொத்துமல்லி, இஞ்சி-பூண்டு விழுது, பாதியளவு தயிர், 5 தேக்கரண்டி கொழம்பு மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து 20-30 நிமிடங்களுக்கு எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. இதற்கிடையில், பிரஷர் குக்கரில் எண்ணெயை சூடாக்கிக்கொள்ளவும், ராம்பை இலை/பந்தன் இலை, கரம் மசாலா தூள், மீதமுள்ள நறுக்கப்பட்ட வெங்காயம், புதினா, கொத்துமல்லி இலைகளையும் சேர்த்து. நன்றாகக் கலக்கும்வரை வதக்கவும்.
  4. இப்போது இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வறுக்கவும். இவற்றோடு சிவப்பு மிளகாய்த்தூளையும் நன்றாக நறுக்கப்பட்ட தக்காளியையும் சேர்க்கவும். கலந்து மூடி நடுத்தர தீயில் கலவை சாந்தாகி எண்ணெய் பக்கவாட்டில் வரும்வரை சமைக்கவும்.
  5. இவற்றோடு மேரினேட் செய்யப்பட்ட ஆட்டிறைச்சித் துண்டுகளைச் சேர்த்து ஆட்டிறைச்சித் துண்டுகள் தண்ணீரை வெளியேற்றும்வரை வதக்கவும். இது 10 நிமிடங்கள் ஆகும். அவ்வப்போது கலக்கவும் ஆட்டிறைச்சி சாறை உறிஞ்சும்வரை.
  6. வெ ளியேற்றப்பட்ட தண்ணீர் 3/4 பங்கிற்கு குறைந்ததும், தக்காளி, உப்பு சேர்க்கவும். சமைப்பதற்கு மேலும் தண்ணீர் சேர்க்கவும். ஆவி வெளிவரத் துவங்கியதும், விசிலைப் போடவும். இதை நடுத்தர வெப்பத்தில் 25 நிமிடங்கள் சமைக்கவிடவும்.
  7. 1/2 தேங்காயையும் கசகசாவையும் தேவையானத் தண்ணீரை விட்டு அறைத்து சாந்து தயாரித்துக்கொள்க. 25 நிமிடத்திற்குப் பிறகு தீயை அடக்கிவிட்டு பிரஷரை வெளியேற்றி மூடியைத் திறக்கவும். தேவைப்பட்டால் உப்பு போட்டுக் கலந்துகொள்ளவும்.
  8. மேலே தயாரிக்கப்பட்ட தேங்காய்-கசகசா சாந்தைச் சேர்த்துக் கலந்துகொள்ளவும். 5-7 நிமிடங்கள் குறைவான தீயில் சமைக்கவும். தீயை நிறுத்திவிட்டு புத்தம்புதிய கொத்துமல்லி இலைகளால் அலங்காரம் செய்க.
  9. இந்தச் சூடான காரசாரமான வாசனமிகுந்தத இறைச்சி அன்னம் இட்லி, இடியாப்பம், கல்தோசை, சாதம், பரோட்டாவுடன் பரிமாறும்போது மிக ருசியாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்