வீடு / சமையல் குறிப்பு / கலவைக் காய்கறி புலாவ்

Photo of Mix vegetable pulao/pilaf by Nusrath Jahan at BetterButter
12150
234
4.5(0)
0

கலவைக் காய்கறி புலாவ்

Nov-01-2015
Nusrath Jahan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 கப் /250 கிராம் = பாஸ்மதி அரிசி
  2. 1/4 கப் - கேரட்
  3. 1/4 கப் - பட்டாணி
  4. 1/4 கப் -குடமிளகாய்
  5. 1 - வெங்காயம்
  6. 1 - தக்காளி (சிறியது)
  7. 2 - பச்சை ஏலக்காய்
  8. 2 - கிராம்பு
  9. 1 இன்ச் - இலவங்கப்பட்டை
  10. 4 தேக்கரண்டி - எண்ணெய்
  11. 3 தேக்கரண்டி - கொத்துமல்லி
  12. 1 தேக்கரண்டி - இஞ்சி பூண்டு விழுது
  13. 1 தேக்கரண்டி - புதினா
  14. 1/4 தேக்கரண்டி - சிவப்பு மிளகாய்த் தூள்
  15. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. அரிசியைக் கழுவி 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். அனைத்துக் காய்கறிகளையும் நறுக்கி எடுத்து வைக்கவும்.
  2. இதற்கிடையில் 4 கப் தண்ணீர் வேறொரு பாத்திரத்தில் ஊற்றி கொதி நிலைக்குக் கொண்டுவரவும்.
  3. ஆழமான சாஸ் பாத்திரத்தில் எண்ணெயைச் சூடுபடுத்தி வெங்காயம் மசாலாக்கள் முழுவதையும் போட்டு பொன்னிறமாகும்வரை வேகவைக்கவும்.
  4. இஞ்சிப் பூண்டு விழுது தக்காளி சேர்த்து தக்காளி மிருதுவாகி கூழாகும்வரை வேகவைக்கவும்.
  5. மீதமுள்ள எல்லா மசாலாக்களையும் காய்கறிகளையும் சேர்த்து 1 நிமிடத்திற்கு வேகவைக்கவும். இப்போது காய்கறிகளோடு வெந்நீர் சேர்க்கவும்.
  6. ஊறவைத்த அரிசியிலிருந்து தண்ணீரை வடிக்கட்டிவிட்டு காய்கறித் தண்ணீரில் சேர்க்கவும். உப்பு, புதினா கொத்துமல்லி இலைகள் சேர்க்கவு்.
  7. மூடியிட்டு மிதமானச் சூட்டில் அரிசி 3/4 அளவிற்கு வேகும் வரை வேகவைக்கவும். தீயை குறைத்துவிட்டு, மூடியிட்டு தம்மில் ஆவி வெளியேறும்வரை வைக்கவும், சாதம் ஏறக்குறைத் தயாராகிவிட்டது.
  8. உங்களுக்குப் பிடித்த குழம்பு அல்லது ஊறுகாயுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்