வீடு / சமையல் குறிப்பு / உடனடி முறுக்கு செய்முறை

Photo of Instant Murukku Recipe by Jyothi Rajesh at BetterButter
1952
174
4.0(0)
0

உடனடி முறுக்கு செய்முறை

Nov-07-2015
Jyothi Rajesh
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. அரிசி மாவு - 1 கப் (நான் இடியாப்ப மாவு பயன்படுத்தினேன்)
  2. வறுத்த பருப்புகள் - 2 தேக்கரண்டி
  3. சீரகம் - 2 தேக்கரண்டி
  4. வெள்ளை எள் - 2 தேக்கரண்டி
  5. உப்பு - 1 தேக்கரண்டி
  6. வெண்ணெய் - 3 தேக்கரண்டி (உருக்கியது)
  7. வெந்நீர் - சிறிதளவு தேக்கரண்டியில் ( நான் 1/2 கப் பயன்படுத்தினேன்)

வழிமுறைகள்

  1. ஒரு பிளண்டரில் வறுத்தப் பருப்புகளைச் சேர்த்து மென்மையானத் தூளாக அரைத்துக்கொள்ளவும்.
  2. அரிசி மாவை 2-3 முறைகள் சலித்துக்கொள்ளவும். அடுத்து வறுத்தப் பருப்பு மாவை அரிசி மாவில் சலித்துக்கொள்ளவும்.
  3. சீரகம், உப்பு, வெண்ணெய் சேர்த்துக்கொள்ளவும் சிறு துணுக்குகளாக மாறும்வரை நன்றாக விரல்களால் நன்கு கலக்கிக்கொள்ளவும்.
  4. இப்போது வெந்நீரை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக்கொள்க. ஒரே நேரத்தில் அதிக தண்ணீர் சேர்க்கவேண்டாம், 1-2 தேக்கரண்டி ஒரு சமயத்தில் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்வோம், தேவைப்பட்டால் மேலும் சில தேக்கரண்டி சேர்த்து கலந்துகொள்ளலாம்.
  5. மிருதுவான மாவு உருவாகும்வதை இதைத் தொடரவும். மாவை மூடி அடுப்பிற்கு சற்று தொலைவில் வைக்கவும், இல்லையேல் மாவு அதிகம் காய்ந்துபோய்விடும், உங்களால் முறுக்கு பிழிய முடியாது.
  6. ஒரு அகலமாக கடாயில் எண்ணெயை சூடுபடுத்திக்கொள்க. சூடுபடுத்தும்போது, அச்சில் முறுக்குமாவுக் கலவையை நிரப்பவும். நான் முறுக்கு அச்சில் ஒற்றை நட்சத்திரத்தைப் பயன்படுத்தினேன்.
  7. எண்ணெய் தடவிய கரண்டியில் முறுக்கைப் பிழிந்து சூடான எண்ணெயில் மெதுவாக விடவும். (அல்லது நேரடியாகவே நீங்கள் எண்ணெயில் பிழியலாம்)
  8. முறுக்கை விட்டதும், தீயை நடுத்தரமாக வைத்துக்கொள்ளவும். கரண்டியிலிருந்து தானாக முறுக்கு விடுபடும்வரை காத்திருக்கவும்.
  9. ஜல்லி கரண்டியிலிருந்து முறுக்கு விடுபடவில்லை என்பதை நீங்கள் பார்த்தால், ஒரு பக்கம் வெந்ததும் இன்னொரு கரண்டியால் முறுக்கை மெல்ல தள்ளிவிடலாம், எனக்கு தானாக விடுபட்டுவிட்டது.
  10. எண்ணெயில் பொரிக்கவும், இரண்டு பக்கமும் பொன்னிறமாகும்வரை. எண்ணெயில் உள்ள குமிழ் குறைந்து வேகும் சப்தம் நின்றிருப்பதை நீங்கள் பார்க்கலாம், முறுக்கு வெந்துவிட்டதைக் குறிக்கிறது. எண்ணெயிலிருந்து எடுத்து சமையல் துண்டில் வைக்கவும், அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவதற்கு.
  11. முறுக்கு/முள்ளு முறுக்கு தயார். ஆறியதும், காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமிக்கவும். 10. இந்த தீபாவளிக்கானத் தயாரிப்பு, மகிழுங்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்