வீடு / சமையல் குறிப்பு / உடனடி குங்குமப்பூ பேடா

Photo of Instant Kesar Peda by Jyothi Rajesh at BetterButter
2873
630
4.6(0)
1

உடனடி குங்குமப்பூ பேடா

Nov-07-2015
Jyothi Rajesh
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • பிரெஷர் குக்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. சுண்டியப் பால் 1 கப்
  2. பால் பவுடர் 1 கப்
  3. நெய்/வெளுக்கப்பட்ட வெண்ணெய் 2 தேக்கரண்டி
  4. கேஸ்டர் சர்க்கரை 1 1/2 தேக்கரண்டி
  5. வெதுவெதுப்பான பால் 2 தேக்கரண்டி
  6. குங்குமப்பூத் தாள் ஒரு தாராள சிட்டிகை
  7. ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
  8. அலங்கரிப்பதற்கு -
  9. பிஸ்தா பருப்பு
  10. குங்குமப்பூ தாள்

வழிமுறைகள்

  1. முதலில் குங்குமப்பூ தாளை வெதுவெதுப்பான பாலில் ஊறவைத்து எடுத்து வைக்கவும்.
  2. நெய்யை ஒரு நான் ஸ்டிக் கடாயில் சிறு தீயில் சூடுபடுத்துக. நெய் உருகியதும் சுண்டியப்பாலைச் சேர்த்து கலக்கவும். சிறு தீயில் சுண்டியப்பால் கொதிக்கும்வரை வேகவைக்கவும்.
  3. பால் பவுடர் கேஸ்டர் சர்க்கரை சேர்த்துத் தொடர்ந்து கலக்கி உருவாகிய அனைத்துக் கட்டிகளையும் உடைக்கவும்.
  4. சிறு தீயில் தொடர்ந்து வேகவைக்கவேண்டும், இடைவிடாமல் கிளரிக்கொண்டே. கட்டிகளை உடைக்கவும் இல்லையேல் மென்மையான இறுதி பேடாவை நீங்கள் பெறமுடியாது.
  5. கலவை அடர்த்தியானதும் ஏலக்காய் தூள், பாலில் ஊறவைத்த குங்குமப்பூ சேர்த்து கலக்கவும். இப்போது கலவை இலகத் தொடங்கும். கவலைப்படவேண்டாம் விரைவில் அது அடர்த்தியாகிவிடும்.
  6. கலவை அடர்த்தியானதும் கடாயின் பக்கங்களிலிருந்து விடுபட ஆரம்பிக்கும். கலவையின் ஒரு சிறிய உருண்டையை எடுத்து உருட்டிக்கொள்ளவும். சூடாக இருக்கும் கவனம். உங்கள் விரல்களைச் சுட்டுக்கொள்வீர்கள்.
  7. அதனால் கவனமாகவும துரிதமாகவும் விரல்களைச் சுட்டுக்கொள்ளாமல் செய்யவும். உருண்டைகளாக உங்களாக உருட்ட முடிந்தால், கலவை உங்கள் விரல்களில் ஒட்டாது, சூட்டிலிருந்து எடுப்பதற்கு தயார் என்று பொருள்.
  8. கலவை உங்கள் விரல்களில் ஒட்டினால், மேலும் 2-3 நிமிடங்கள் வேகவைத்து சோதித்துப்பார்க்கவும்.
  9. தேவையான பதத்தை அடைந்ததும், கடாயை அடுப்பிலிருந்து எடுத்து சிறிது நேரம் ஆறவிடவும். பிறகு சிறு உருண்டைகள் எடுத்து பேடா வடிவத்தில் தயாரித்துக்கொள்க. பேடா வடிவத்தைப் பெற நான் பேடா அச்சைப் பயன்படுத்தினேன்.
  10. உங்களிடம் பேடா அச்சு இல்லை என்றால், பேடாக்களை உருட்டி சிறிய ஒரு பிஸ்தாவை மையத்தில் வையுங்கள், அது அருமையாக இருக்கும்.
  11. அனைத்துக்கலவையும் இப்படியே செய்து தேவைப்பட்டால் அலங்கரித்துக்கொள்ளவும். அவ்வளவுதான்! சுவையான உடனடி குங்குமப்பூ பேடா அருமையான இருக்கும், உண்பதற்கும் ஏற்றதாக இருக்கும். : உண்டு மகிழவும்!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்