Photo of Thattai by Subha Prakash at BetterButter
3874
39
4.0(0)
0

தட்டை

Nov-10-2015
Subha Prakash
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு - 1 கப்
  2. உளுந்து மாவு - 1 தேக்கரண்டி
  3. கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
  4. வறுத்த பருப்பு- 2 தேக்கரண்டி
  5. எள் - 1 தேக்கரண்டி
  6. சிவப்பு மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
  7. உப்பு - தேவையான அளவு
  8. பொரிப்பதற்கு எண்ணெய்
  9. வெண்ணெய் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பை 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து, தண்ணீர் வடிகட்டி, எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. அரிசி மாவையும் உளுத்தம்பருப்பு மாவையும் ஒரு சூடான கடாயில் ஒரு நிமிடத்திற்கு கொஞ்சமாக வதக்கி இவற்றோடு உப்பு, ஊறவைத்த கடலைப்பருப்பு, எள், வறுத்த கடலைமாவு, சிவப்பு மிளகாய்த் தூள், சேர்த்து வெண்ணெய்யை உறுக்கி கலவையில் ஊற்றவும்.
  3. தண்ணீர் விட்டு எல்லாவற்றையும் கலந்துகொள்ளவும். மாவு சில நிமிடங்கள் ஆறட்டும்.
  4. மாவிலிருந்து உருண்டை செய்து, கைகளில் எண்ணெய் தடவி, ஒரு பிளாஸ்டிக் கவரின் மீது கைகளால் மொத்தமான ஒரு வட்டவடிவில் உருண்டையை பரவச் செய்யவும். தட்டையை முள் கரண்டியால் ஓட்டைபோடவும், பூரியாக உப்பாமல் இருப்பதற்கு.
  5. எண்ணெயில் நன்றாகப் பொரிக்கவும். ஆறியதும், காற்றுப்புகாத பெட்டியில் சேமித்துக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்