வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு மிளகு சிக்கன்

Photo of Chettinad Pepper Chicken by Febina Farook at BetterButter
902
126
0.0(0)
0

செட்டிநாடு மிளகு சிக்கன்

Nov-12-2015
Febina Farook
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோழி - 1 கிலோ
  2. வெங்காயம் - 5 நன்றாக நறுக்கப்பட்டது
  3. தக்காளி - 3 நன்றாக நறுக்கப்பட்டது
  4. இஞ்சி- பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  5. பச்சை மிளகாய் - 3 நீளவாக்கில் பிளக்கப்பட்டது
  6. எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
  7. காஷ்மீர் மிளகாய்த்தூள் - 4 தேக்கரண்டி
  8. மல்லித்தூள் - 1 1/2 தேக்கரண்டி
  9. கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
  10. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  11. மிளகுத்தூள் - 1 1/2 தேக்கரண்டி
  12. மிளகு நொறுக்கப்பட்டது - 1 தேக்கரண்டி
  13. தேங்காய் துண்டுகள் - 1தேக்கரண்டி
  14. கறிவேப்பிலை - ஒரு தண்டு
  15. தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. மிளகாய்த் தூள் பாதியளவு, மிளகுத்துள் பாதியளவு, உப்பு, எலுமிச்சை சாறு பாதியளவு, மஞ்சள் தூளுடன் சிக்கன் துண்டுகளையும் மேரினேட் செய்து எடுத்து வைக்கவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெயை சூடுபடுத்தி, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது, மிளகாய், மஞ்சள் தூள், கொத்துமல்லி, கரம் மசாலா மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  3. தக்காளி சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வேகவைத்து உப்பு சேர்க்கவும். தக்காளியை மசித்து மேரினேட் செய்து சிக்கன் துண்டுகளைச் சேர்க்கவும். மூடியிட்டு குறைவான தீயில் சிக்கனை வேகவைக்கவும்.
  4. சிக்கன் வேகவைக்கப்பட்டதும், சிக்கனில் இருந்து தண்ணீர் வெளிவரும். மிளகு சேர்த்து 2 நிமிடங்களுக்கு சமைக்கவும். எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை நிறுத்திவிடவும்.
  5. இன்னொரு பாத்திரத்தில், தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தி கறிவேப்பிலையையும் காய்ந்த தேங்காய்த் துண்டுகளையும் சேர்க்கவும். அவற்றை வறுத்து சிக்கனைச் சேர்க்கவும். சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்