வீடு / சமையல் குறிப்பு / வெண்ணெய் நிறைந்த உருளைக்கிழங்கு மசாலா பிரெட்

Photo of Cheesy potato masala bread by Balachandrika Kandaswamy at BetterButter
2330
198
4.7(0)
0

வெண்ணெய் நிறைந்த உருளைக்கிழங்கு மசாலா பிரெட்

Nov-12-2015
Balachandrika Kandaswamy
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
9 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • ஃப்யூஷன்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 9

  1. மாவுக்கு: (1 கப் அளவு = 240 மிலி)
  2. மைதா - 1 1/2 கப் + தூவுவதற்கு மேலும் கொஞ்சம்
  3. உப்பு - 3/4 தேக்கரண்டி
  4. செயல்பாட்டு உலர் ஈஸ்ட் - 1/2 தேக்கரண்டி
  5. தண்ணீர் - தேவையான அளவு
  6. பால் - 40 மிலி
  7. உப்பிடப்படாத வெண்ணெய் (அறை வெப்பம்) - 30 மிலி (1/8 கப்)
  8. பூரணத்திற்கு:
  9. துருவிய வெண்ணெய் - 4-6 தேக்கரண்டி (நான் துருவிய பார்மேசான் வெண்ணெய் பயன்படுத்தினேன்)
  10. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  11. வெங்காயம் - 1
  12. சீரகம் - 1 தேக்கரண்டி
  13. கொத்துமல்லி இலைகள் (நறுக்கியது) - 1 கையளவு + அலங்கரிக்கக் கொஞ்சம்
  14. உருளைக்கிழங்கு - 1 (பெரிய அளவு)
  15. உப்பு - தேவையான அளவு
  16. சிவப்பு மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
  17. சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
  18. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஈஸ்ட்டை சிறிதளவுத் தண்ணீரில் ஊறவைத்து குறைந்தது 5 நிமிடங்கள் நுரை வரும்வரை வைக்கவும்.
  2. 3/4 கப் உப்பை மாவுடன் ஒரு கிண்ணத்தில் கலந்துகொள்க.
  3. கரைத்த ஈஸ்ட் தண்ணீரையும் பாலையும் மாவில் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க.
  4. மாவு தயாரிக்க மெதுவாகத் தண்ணீரைச் சேர்க்கவும். மாவு ஒட்டும் பதத்தில் இருக்கவேண்டும்.
  5. மாவை ஒரு ஈரத் துணியால் மூடி குறைந்தது 2 மணி நேரத்திற்கு எடுத்து வைக்கவும்.
  6. 2 மணி நேரத்திற்குப் பிறகு மாவு இரட்டிப்பாகும்.
  7. மிருதுவாக்கப்பட்ட வெண்ணெயை மாவில் சேர்த்து நன்றாகப் பிசைந்து எடுத்து வைக்கவும்.
  8. பிரஷர் குக்கரில் உருளைக்கிழங்கை 3 விசில்களுக்கு வேகவைத்து நன்றாக மசித்துக்கொள்க. பொடியாக வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும்.
  9. ஒரு பாத்திரத்தில் எண்ணெயைச் சூடுபடுத்தி சீரகத்தைச் சேர்க்கவும்.
  10. வெடிக்க ஆரம்பித்ததும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.
  11. வெங்காயம் வெளுத்ததும் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சாம்பார் தூளைச் சேர்க்கவும். வழக்கத்தைவிட உப்பைக் கொஞ்சமாகச் சேர்க்கவும், உப்பு சுவையுடையதாக வெண்ணெயை நாம் சேர்க்க இருப்பதால்.
  12. நன்றாகக் கலந்து மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
  13. கொஞ்சம் தண்ணீர் தெளித்து 5 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.
  14. நறுக்கிய கொத்துமல்லி இலைகளைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க.
  15. பார்ச்மெண்ட் தாளை ஒரு பேக்கிங் பாத்திரத்தில் வைத்து கொஞ்சம் வெண்ணெய் தடவவும்.
  16. கொஞ்சம் மாவை ரோலிங் பாத்திரத்திலும் மாவிலும் தூவுக.
  17. மாவை 2 சம அளவுள்ள உருண்டைகளாக பிரிக்கவும்.
  18. 1 மாவு உருண்டையைத் தட்டி ஒரு பெரிய வட்டமாக உருட்டி பார்ச்மெண்ட் தாளில் வைக்கவும்.
  19. உருளைக்கிழங்கு மசாலாவை மாவு வட்டத்தின் மையத்தில் பரப்பவும்.
  20. பக்கங்களை மடித்து மசாலாவை மூடவும், அப்போதுதான் மசாலா முழுமையாக மூடப்படும்.
  21. அதன் மேல் வெண்ணெயைத் தூவவும்.
  22. ஓவனை 180 டிகிரி செல்சியசுக்கு அல்லது 350 டிகிரி பேரன்ஹீட்டுக்கு ப்ரீ ஹீட் செய்க.
  23. இன்னொரு மாவு உருண்டையைத் தட்டி அடர்த்தியாக வட்டமாக்கி வெண்ணெய் அடுக்கின் மீது வைக்கவும்.
  24. அனைத்துக் கூடுதல் பக்கங்களையும் கீழ் அடுக்கில் சொருகவும்.
  25. மேலே நறுக்கிய கொத்துமல்லியைத் தூவுக.
  26. 30-35 நிமிடங்களுக்கு பேக் செய்க. (ஒரு பல்குத்தும் குச்சியை நுழைத்தால், சுத்தமாக வெளிவரவேண்டும்)

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்