வீடு / சமையல் குறிப்பு / மக்கன் பேடா/ பூரணம் வைக்கப்பட்டக் குலாப் ஜாமுன்

Photo of Makkan Peda\Stuffed Gulab Jamun by Shyamala Kumar at BetterButter
2098
24
0.0(0)
0

மக்கன் பேடா/ பூரணம் வைக்கப்பட்டக் குலாப் ஜாமுன்

Nov-15-2015
Shyamala Kumar
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
25 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 25

  1. மைதா - 150 கிராம்
  2. சர்க்கரையில்லா கோவா - 100 கிராம்
  3. நாட்டு நெய் - 2 தேக்கரண்டி
  4. சமையல் சோடா - ஒரு சிட்டிகை
  5. கெட்டித் தயிர் - 1 தேக்கரண்டி
  6. சர்க்கரை - 1 கப்
  7. தண்ணீர் - 3/4 கப்
  8. ஏலக்காய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
  9. உணவு நிறமி - 2 அல்லது 3 துளிகள் (மஞ்சள்/ஆரஞ்சு)
  10. உலர் பழங்கள் - ஒரே அளவில் முந்திரி, பாதாம், உலர் திராட்சை, முலாம்பழ விதைகள்
  11. நன்றாக வறுப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உலர் பழங்களை சிறிசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்க. சர்க்கரையில்லா கோவாவை உடைத்துக்கொள்ளவும், எங்காவது கட்டிப்போயிரந்தால் நீக்குவதற்கு.
  2. மைதா, கோவா, நாட்டு நெய், சமையல் சோடா, தயிர் ஆகியவற்றை மிருதுவான மாவாகப் பிசைந்துகொள்க. ஒரு சிறிய அளவு மாவை எடுத்து சோதித்துப்பார்க்கவும், உடைந்தால் கொஞ்சம் பால் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்க. மூடி 10 நிமிடங்கள் வைக்கவும்.
  3. ஒரு கடாயில், சர்க்கரை தண்ணீர் விட்டு சர்க்கரை கரையும்வரை சூடுபடுத்தவும். ஒரு தேக்கரண்டி பாலை சாறில் ஊற்றவும். அழுக்கு/நுரை பக்கவாட்டில் சேரும். கரண்டியால் அழுக்கை நீக்கவும். ஏலக்காய்தூள் சேர்த்து உணவு நிறமியையும் சேர்க்கவும்.
  4. சாறை 5-8 நிமிடங்களுக்கு குறைவான தீயில் கொதிக்கவிடவும். ஜாமுன்களை/பேடாக்களை நாம் சேர்க்கும்போது, சாறு சூடாக இருக்கவேண்டும், கொதிக்கக்கூடாது.
  5. கையில் எண்ணெய் தடவி சிறிய எலுமிச்சை அளவில் மாவு உருண்டைகளை எடுத்து, மிருதுவான உருண்டையாக உருட்டி, ஒரு தேக்கரண்டி நறுக்கப்பட்ட உலர் பழங்களை அதில் வைக்கவும். ஜாமுனை சற்றே தட்டிக்கொள்ளவும். ஒரு தட்டில் வைத்து மூடிவைக்கவும்.
  6. கடாயில் எண்ணெயை சூடுபடுத்தவும் சூடாகும்வரை. தீயை மிதமான அளவில் வைக்கவும்.
  7. ஜாமுன்களை 5 அல்லது 6 என ஒரு சமயத்தில் பொன்னிறமாகும்வரை பொரிக்க ஆரம்பிக்கவும். உடனே சர்க்கரைப் பாகில் ஊறவைக்கவும். இதேபோல் மீதமுள்ள மாவுக்கும் செய்யவும்.
  8. ஜாமுன்களை/பேடாக்களை பாகுடன் ஒரு தட்டையான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் ஒற்றை அடுக்கில் மாற்றவும் அப்போதுதான் அது முறையாக மூழ்கும். 5-6 மணி நேரங்கள் ஊறியபின், சூடாகவோ சில்லென்றோ பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்