வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் குருமா

Photo of Chicken Korma by PassionateAboutBaking Rajpal at BetterButter
2691
292
4.8(0)
0

சிக்கன் குருமா

Nov-16-2015
PassionateAboutBaking Rajpal
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • ஆவாதி
  • மெயின் டிஷ்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 800 கிராம் கோழி எலும்புடன் துண்டுகளாக வெட்டியது
  2. 1/3 கப் நெய்
  3. 3 வெங்காயம் நன்றாக வெட்டியது {சுமார் 200 கிராம்}
  4. 5-6 பச்சை ஏலக்காய்/ பச்சை ஏலச்சி {சிறிதாக நறுக்கப்பட்டது}
  5. 1 1/2 தேக்கரண்டி இஞ்சி விழுது
  6. 1 1/2 தேக்கரண்டி பூண்டு விழுது
  7. 200 கிராம் கெட்டியான அடித்த தயிர்
  8. 4 டீக்கரண்டி கொத்தமல்லி தூள் சலித்தது
  9. 1 1/2 டீக்கரண்டி சிகப்பு மிளகாய்த்தூள்
  10. 5-6 முழு கிராம்பு

வழிமுறைகள்

  1. அடிகனமான ஒட்டாத கடாயில் நெய் விட்டு சூடுசெய்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். {இது கறுகிவிட கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள், இல்லையெனில் குருமா கசப்பானதாகிவிடும்}.
  2. பின்னர் வெங்காயத்தை நீக்கிவிட்டு நெய்யை ஆறவைக்கவும். வெங்காயத்தில் 1-2 தேக்கரண்டி தயிர் கலந்து அரைக்கவும். மென்மையாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை தனியாக வைத்துக் கொள்ளவும்.
  3. அதே கடாயில் மீதமுள்ள எண்ணெய்யை ஊற்றிக் கொள்ளவும், ஏலக்காய்/சொட்டி ஏலச்சி மற்றும் கிராம்பு சேர்த்து வாசனை வரும் வரை 1-2 நிமிடம் வரை வறுக்கவும் ( தேவையெனில் மேலும் சிறு நெய் சேர்த்துக் கொள்ளவும்)
  4. இப்போது கோழித் துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும். உலர்ந்து, பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதை கடாயில் இருந்து எடுத்து தனியாக கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  5. சூடான நெய்யில் சலித்த கொத்தமல்லித் தூள், சிகப்பு மிளகாய்த்தூள், இஞ்சி மற்றும் பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும். ஒன்றாக வரும் வரை 1-2 நிமிடங்கள் நன்றாக கலந்துக் கொள்ளவும். பிறகு சிக்கனை திரும்ப சேர்த்து 2-3 நிமிடங்கள் கிண்டவும்.
  6. இப்போது வெங்காயம்-தயிர் கலவையையும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி கடாயை மூடி அதை 20 நிமிடங்கள் வரை லேசான தீயில் வேகவிடவும். இப்போது குழம்பு மனமாகவும் அழகான நிறத்திலும் இருக்கும்.
  7. உங்களுக்கு இன்னும் குழம்பு வேண்டுமென்றால் சிறிது நீர் சேர்த்து அதற்கு ஏற்றவாறு உப்பு சேர்த்துக் கொள்ளவும். சுவை அனைத்தும் சேர்வதற்கு பரிமாறுவதற்கு 30 நிமிடங்கள் முன்பு செய்து வைத்துவிடவும். உங்களுக்கு தேவையெனில் கரம் மசாலாவை சிறிது தூவிக்கொண்டு ரொட்டியுடன் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்