வீடு / சமையல் குறிப்பு / மதுரை பாணி மீன் குழம்பு

Photo of Madurai Style Fish Kuzhambu by Menaga Sathia at BetterButter
3913
55
4.5(0)
0

மதுரை பாணி மீன் குழம்பு

Nov-16-2015
Menaga Sathia
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மீன் துண்டுகள் - 8
  2. புளி - 1 பெரிய எலுமிச்சை அளவு
  3. முத்து வெங்காயம் - 10
  4. தக்காளி - 1
  5. பூண்டு பற்கள் - 6
  6. மல்லித்தூள் - 1.5 தேக்கரண்டி
  7. சிவப்பு மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
  8. கறிவேப்பிலை - 1 கொத்து
  9. அரைப்பதற்கு: மிளகு - 1/2 தேக்கரண்டி
  10. சீரகம் - ஒவ்வொன்றும் 1/2 தேக்கரண்டி
  11. முத்து வெங்காயம் - 5
  12. பூண்டு பற்கள் - 3
  13. மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
  14. சிவப்பு மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
  15. தாளிப்புக்கு: நல்லெண்ணை - 2 தேக்கரண்டி
  16. கடுகு - 1/2 தேக்கரண்டி
  17. உளுந்து - 1/2 தேக்கரண்டி
  18. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
  19. சீரகம் - 1/4 தேக்கரண்டி
  20. கறிவேப்பிலை கொஞ்சம்

வழிமுறைகள்

  1. வெந்நீரில் புளியை ஊறவைத்து அதிலிருந்து சாறு எடுத்துக்கொள்ளவும்.
  2. 'அரைப்பதற்கு' கீழுள்ள சேர்வைப்பொருள்களை நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடுபடுத்தி 'தாளிப்பு'க்குக் கீழுள்ள சேர்வைப்பொருள்களை தாளித்து, நறுக்கப்பட்ட வெங்காயம், நறுக்கப்பட்ட தக்காளி, பூண்டு பற்கள் ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும். நன்றாக வதக்கவும்.
  4. அதன்பிறகு மசாலா சாந்து, கொத்துமல்லி, சிவப்பு மிளகாய்த்தூள் சேர்த்து, பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.
  5. புளி சாறு, உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும்.
  6. பச்சை வாடைப்போனதும் சுத்தப்படுத்திய மீன் துண்டுகளை குழம்பில் போட்டு மேலும் 5 நிமிடத்திற்கு கொதிக்கவிட்டு, கொஞ்சம் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். தீயை அடக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்