வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு சாறு - குளிர் கால வெப்பமூட்டி எடைகுறைப்பு உணவுக்குறிப்பு

Photo of Ulava Charu - A Winter Warmer and Weight-Loss Recipe by Aruna P at BetterButter
3545
40
4.0(0)
0

கொள்ளு சாறு - குளிர் கால வெப்பமூட்டி எடைகுறைப்பு உணவுக்குறிப்பு

Nov-18-2015
Aruna P
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • ஆந்திரப்ரதேஷ்
  • சூப்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொள்ளு - 1 கப்
  2. சின்ன வெங்காயம் அல்லது மெட்ராஸ் வெங்காயம் - 10
  3. அடர்த்தியான புளிச்சாறு - 1 தேக்கரண்டி
  4. பச்சை மிளகாய் - 2
  5. சிவப்பு மிளகாய்த் தூள் - 3/4 தேக்கரண்டி
  6. மஞ்சள் - 1/4 தேக்கரண்டி
  7. கடுகு - 3/4 தேக்கரண்டி
  8. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  9. பூண்டு பற்கள் - 2 பெரியது (விருப்பம் சார்ந்தது)
  10. கறிவேப்பிலை - 4ல் இருந்து 5
  11. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  12. பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  13. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. கொள்ளினை நன்றாகக் கழுவிக்கொள்க.
  2. 3 கப் தண்ணீரில் 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
  3. தண்ணீரை வடிக்கட்டவும்.
  4. 3 கப் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் 4அல்லது 5 விசில்களுக்கு வேகவைக்கவும்.
  5. தண்ணீரை வடிக்கட்டி கொள்ளு வேகவைத்ததிலேயே சேமித்து வைக்கவும்.
  6. 1 கப் வேகவைத்த கொள்ளை எடுத்து கொள்ளு பொரியல் செய்ய எடுத்து வைக்கவும்.
  7. பருப்பு வேகவைத்ததில் புளியைத் தண்ணீரில் கரைக்கவும்.
  8. 1 கப் கொள்ளினை சாந்தாக அரைத்துக்கொள்க
  9. ஒரு கனமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்க.
  10. கடுகு சேர்த்து வெடிக்கும்வரைக் காத்திருக்கவும்.
  11. சீரகமும் பிளந்த பச்சை மிளகாயையும் சேர்க்கவும்.
  12. கலக்கி சில நொடிகள் சீரகம் நிறம் மாறும்வரை வறுக்கவும்.
  13. வெங்காயம், நசுக்கிய பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து கலக்கி 2ல் இருந்து 3 நிமிடங்கள் வறுக்கவும்.
  14. சேமித்தத் தண்ணீரை புளிக்கலவையோடு சேர்க்கவும்.
  15. மிளகாய்த் தூள், மஞ்சள்தூள், பெருங்காயம் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  16. கலவை கொதிக்கட்டும், மூன்றில் ஒரு பகுதியாகக் குறையட்டும்.
  17. கொள்ளு சாந்தையும் 1/4 கப் தண்ணீரையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  18. கொள்ளு சாறு அடர்த்தியாகும்வரை கொதிக்கவும்.
  19. ஆவிபறக்கும் சாதத்தோடு வெள்ளை வெண்ணெய் அல்லது நெய்யோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்