வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் ஸ்பிரிங் ரோல்

Photo of Chicken Spring Rolls by Ruchira Hoon at BetterButter
5305
353
5.0(0)
1

சிக்கன் ஸ்பிரிங் ரோல்

Nov-19-2015
Ruchira Hoon
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • பான் ஆசியன்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 1 தேக்கரண்டி சோயா சாஸ்
  2. 1/4 தேக்கரண்டி புதிதாக அரைத்த கருமிளகு
  3. 1 தேக்கரண்டி சோள மாவு
  4. 1 தேக்கரண்டி மிளகாய் பூண்டு சாஸ்
  5. 200 கிராம் மசித்த சிக்கன்
  6. 4 பூண்டு பற்கள் நசுக்கியது
  7. 1 தேக்கரண்டி துருவிய இஞ்சி
  8. 100 கிராம் வேகவைத்த நூடுல்ஸ்
  9. 1/2 கப் பச்சை வெங்காயம் நறுக்கியது
  10. 1 கப் துருவிய முட்டைக்கோஸ்
  11. 1/2 கப் துருவிய கேரட்
  12. 2 தேக்கரண்டி ஆய்ஸ்டர் (சிப்பி) சாஸ்
  13. 1 தேக்கரண்டி சோள மாவு
  14. 1/4 கப் தண்ணீர்
  15. ஸ்பிரிங் ரோல் ஷீட்டுகள்
  16. பொரிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. சோயா சாஸ், மிளகாய் பூண்டு சாஸ், மிளகு, சோள மாவு ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் நசுக்கிய சிக்கனில் சேர்க்கவும். 10 நிமிடங்களுக்கு மேரினேட் செய்யவும்.
  2. ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்துக. நசுக்கிய சிக்கனை பொன்னிறமாகும்வரை கலக்கி வறுக்கவும். பிறகு எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  3. அதே பாத்திரத்தில் பச்சை வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை 30 நொடிகள் வேகவைக்கவும். கேரட், நூடுல்ஸ், முட்டைக்கோஸ் ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்றாகக் கலந்து தீயை மிதமான அளவுக்கு மாற்றி சிக்கனைச் சேர்த்து 2 நிமிடங்களுக்குக் கலக்கவும். முழுமையாக ஆறுவதற்கு எடுத்து வைக்கவும்.
  4. ஒரு கிண்ணத்தில் மீதமுள்ள சோள கஞ்சியையும் தண்ணீரையையும் நன்றாகக் கலந்து எடுத்துவைக்கவும்.
  5. ரோல் ரேப்பரை எடுத்து முலையில் 2 தேக்கரண்டி சிக்கன், நூடுல்ஸ் காய்கறிக் கலவையை நிரப்பவும். சிறு சோளமாவைத் தடவி தண்ணீரைக் கலந்து விளிம்புகள் நன்றாக மூடப்பட்டதை உறுதி செய்யவும்.
  6. உயர் தீயில் எண்ணெயைச் சூடுபடுத்துக. ஸ்பிரிங் ரோல்களைப் பொன்னிறமாக பொரித்துக்கொள்ளவும். ஒரு பேப்பர் டவலில் வடிக்கட்டிக்கொள்க. இனிப்பு மிளகாய் சாசுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்