வீடு / சமையல் குறிப்பு / கொழுப்பற்ற காலை உணவு பிரெட்

Photo of Fatfree Breakfast Bread by Namita Tiwari at BetterButter
23400
403
4.7(0)
3

கொழுப்பற்ற காலை உணவு பிரெட்

Nov-19-2015
Namita Tiwari
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • ஐரோப்பிய
  • பேக்கிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 3 கப் மைதா
  2. 1 மற்றும் 1/2 தேக்கரண்டி உப்பு
  3. 1 சிட்டிகை பேக்கிங் சோடா
  4. 3/4ல் இருந்து 1 கப் வெதுவெதுப்பான தண்ணீர்
  5. 1/4 கப் தயிர்
  6. 2 தேக்கரண்டி சர்க்கரை
  7. 2 மற்றும் 1/4 தேக்கரண்டி உடனடி உலர் ஈஸ்ட்
  8. 1-2 தேக்கரண்டி சமையல் எண்ணெய் கிண்ணத்திலும் பிரெட் பாத்திரத்தில் தடவுவதற்காக.

வழிமுறைகள்

  1. முதல் 3 பொருள்கள் ஒரு கிண்ணத்தில் அடித்துக்கொள்ளவும். 3/4 வெதுவெதுப்பானத் தண்ணீரில் சர்க்கரையைக் கரைத்து ஈஸ்ட்டைச் சேர்க்கவும். மூடி 15 நிமிடங்களுக்கு எடுத்து வைக்கவும். மென்மையாகும்வரை தயிரைக் கடைந்துகொள்க. அதன்பின்னர் இவற்றை ஈஸ்ட் கலவையில் சேர்க்கவும்.
  2. அடுத்து திரவப் பொருள்களை மாவுக் கலவையில் சேர்க்கவும். 5ல் இருந்து 6 நிமிடங்கள் பிசைந்துகொள்க. மென்மையான சற்றே ஒட்டும் பதத்தில் உள்ள மாவு வரும்வரை தண்ணீர் சேர்த்துக்கொண்டே இருக்கவும்.
  3. மாவை எண்ணெய் தடவியக் கிண்ணத்திற்கு மாற்றுக. மாவைத் திருப்பிப்போடவும், எண்ணெய் எல்லாபக்கமும் சமமாக பூசப்பட்டு இருப்பதற்காக. 1ல் இருந்து 1 1/2 மணி நேரம் அல்லது இரட்டிப்பாக உப்பும் வரை விட்டுவைக்கவும்.
  4. ஒரு 8 ½ x 4 ½ இன்ச் லோஃப் பாத்திரத்தில் எண்ணெய் தடவிக்கொள்க.
  5. மாவைக் குத்தி மேலும் 5 நிமிடங்களுக்கு மெதுவாக பிசையவும். மாவை செவ்வகமாக உருட்டிக்கொள்ளவும். லோஃப் பாத்திரத்தைவிட அகலமாக இருக்கக்கூடாது.
  6. மாவை உங்களை நோக்கி உருட்டிக்கொள்க. அழுத்தினால் ஒட்டிக்கொள்ளவேண்டும். உருட்டியதை எண்ணெய் தடவி லோஃப் பாத்திரத்தில் வைக்கவும். மூடி இரட்டிப்பு அளவு உப்பும் வரை விட்டுவைக்கவும்.
  7. 190 டிகி செல்சியசுக்கு ப்ரீ ஹீட் செய்யப்பட்ட ஓவனில் 30ல் இருந்து 35 நிமிடங்கள் அல்லது லோஃப் பொன்னிறமாகும்வரையில் அடிப்பாகத்தைத் தட்டினால் சத்தம்கேட்கும் வரையில் பேக் செய்யவும்.
  8. 10 நிமிடங்களுக்குப் பிறகு பாத்திரத்தில் இருந்து எடுத்து ஆறியதும் துண்டுபோட்டு பாலுடன் அல்லது தேனீருடன் விருப்பத்திற்கேற்ப பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்