வீடு / சமையல் குறிப்பு / குதிரைவாலி புதினா சாதம்/ஜாங்கோரா பயன்படுத்தி புதினா சாதம் /சாமோ

Photo of Kuthiraivaali Pudina Rice/Pudina rice using Jhangora/Samo by Priya Srinivasan at BetterButter
2296
8
0.0(0)
0

குதிரைவாலி புதினா சாதம்/ஜாங்கோரா பயன்படுத்தி புதினா சாதம் /சாமோ

Nov-19-2015
Priya Srinivasan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. 1/2 கப் குதிரைவாலி தானியம்
  2. 1/2 கப் மல்லித்தூள்
  3. 1/4 கப் கரம் மசாலா தூள்
  4. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  5. சுவைக்கு உப்பு
  6. 1 தேக்கரண்டி நெய் (விருப்பத்திற்கேற்ப)
  7. பின்வருவனவற்றை அரைக்கவும்:
  8. 2 கையளவு புத்தம்புதிய புதினா இலைகள்
  9. 2 பல் பூண்டு
  10. 2 பச்சை மிளகாய்
  11. ஒரு சிறிய துண்டு இஞ்சி
  12. தாளிப்புக்கு:
  13. 1 தேக்கரண்டி எண்ணெய்
  14. 1/2 தேக்கரண்டி சீரகம்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயை எடுத்து, தானியத்தை எண்ணெய்விடமால் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். (கடாய் சூடாக இருந்தால் ஒரு நிமிடத்திற்கும் குறைவாக ஆகும். அதனால் அடுப்பில் ஒரு கண் வைக்கவும், வறுக்கும்போது.)
  2. 'அரைப்பதற்கு' கீழ் உள்ள சேர்வைப்பொருள்களை எடுத்து, ஒரு மிக்சரில் போட்டு தண்ணீர் விடாமல் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  3. அதே கடாயில் தாளிப்பதற்கு எண்ணெயை சூடுபடுத்தில் சீரகத்தைப் பொரிக்கவும். வறுத்த குதிரைவாலியை எண்ணெயில் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வதக்கவும். அடுத்து அரைத்த சாந்தை ஒரு கப் தண்ணீரோடு சேர்த்துக்கொள்ளவும்.
  4. அதன்பிறகு மஞ்சள் தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலக்கவும். மூடி குறைவான தீயில் வேகும்வரை சமைக்கவும். (இது கிட்டத்தட்ட 8-10 நிமிடங்கள் ஆகலாம், அதனால் கருகவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.)
  5. கடைசியல் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு தீயை அடக்கிவிடவும்.
  6. கொஞ்சம் ரைத்தா அல்லது சாதாரண தயிரோடு இஞ்சி சேர்த்து, கருப்பு உப்புடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்