வீடு / சமையல் குறிப்பு / அலூ ம் அல்லது பெங்கால் பாணி தம் ஆலூ

Photo of Aloo Dum or Bengali Style Dum Aloo by Moumita Malla at BetterButter
6133
308
4.6(0)
0

அலூ ம் அல்லது பெங்கால் பாணி தம் ஆலூ

Nov-20-2015
Moumita Malla
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • மேற்கு வங்காளம்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பேபி உருளைக்கிழங்கு - 500 கிராம்
  2. வெங்காயம் - 1 நறுக்கியது
  3. தக்காளி - 1 சிறியது (நறுக்கியது)
  4. பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  5. இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
  7. மல்லி - 1 தேக்கரண்டி
  8. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  9. காய்ந்த மிளகாய் - 2
  10. இலவங்கப்பட்டை - 1 இன்ச்
  11. ஏலக்காய் - 4
  12. பிரிஞ்சி இலை - 1
  13. கொத்துமல்லி - 1/4 கப் (நறுக்கியது)
  14. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  15. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. உப்புடன் உருளைக்கிழங்கை வேகவைக்கவும். திறந்த கடாயில் அல்லது ஒரு பிரஷர் குக்கரில் வேகவைக்கலாம். பிரஷர் குக்கரில் வேகவைத்தால், இரண்டு விசில்களுக்குப் பிறகு அடுப்பை நிறுத்தவும். ஆறியபின் உருளைக்கிழங்கின் தோலை உரிக்கவும்.
  2. ஒரு அகலமான அடிப்பாகமுள்ள கடாயில் சிறு தீயில் எண்ணெயைச் சூடுபடுத்தி உருளைக்கிழங்கை 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கி, எண்ணெய் சேர்க்கவும். பொன்னிறமாகும்வரை உருளைக்கிழங்குகளை பொரித்து எடுத்து வைக்கவும்.
  3. பிரிஞ்சி இலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும்வரை எண்ணெயில் வதக்கவும். இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடங்கள் வேகவைக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்.
  4. மல்லி, சீரகம், காய்ந்த மிளகாயை ஒரு தவாவில் எண்ணெய் சேர்க்காமல் வறுத்து பொடியாக அரைத்துக்கொள்க. கடாயில் கலந்துகொள்ளவும். 2 நிமிடங்கள் கலந்து கலக்கி கொஞ்சம் தண்ணீர் தெளிக்கவும்.
  5. உருளைக்கிழங்கு சேர்த்து மசாலாக்களோடு சேர்த்து உப்பு சேர்க்கவும் (ஏற்கனவே உப்போடு உருளைக்கிழங்கை வேகவைத்திருந்தால், இங்கே உப்பு சேர்க்கும்போது கவனிக்கவும்).
  6. 1/4 கப் வெந்நீர் சேர்த்து கொதிக்கவிட்டு 3/4 தண்ணீர் ஆவியாகும்வரை வேகவைக்கவும். கரம் மசாலா சேர்க்கவும். இலவங்கப்பட்டை, ஏலக்காயை ஒரு தவாவில் எண்ணெய் சேர்க்காமல் வறுத்து பொடியாக அரைத்துக்கொள்க.)
  7. கரம் மசாலா, கொத்துமல்லி சேர்த்து மூடியிட்டு மூடி 2 நிமிடங்கள் சிறு தீயில் வேகவைக்கவும்.
  8. பரிமாறும் பாத்திரத்தில் மாற்றி, லுசி, பரோட்டா, பூரி, சீரக சாதம், மசாலா சாதத்தோடு உண்டு மகிழ்க.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்