Photo of Vada Curry by Kalpana V Sareesh at BetterButter
2243
118
4.3(0)
1

வடகறி

Nov-23-2015
Kalpana V Sareesh
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1/2 கப் - கடலைப் பருப்பு
  2. 3- சிவப்பு மிளகாய்
  3. 1/4 கப் - பெருஞ்சீரகம்
  4. உப்பு - 1/2 தேக்கரண்டி
  5. 1 - வெங்காயம் நறுக்கப்பட்டது
  6. 2 - தக்காளி நறுக்கப்பட்டது
  7. 2 - பச்சை மிளகாய் பிளக்கப்பட்டது
  8. 1/2 தேக்கரண்டி - மஞ்சள் தூள்
  9. 1 தேக்கரண்டி - சாம்பார் பொடி
  10. 1 இன்ச் - இலவங்கப்பட்டை
  11. 2 - கிராம்பு
  12. உப்பு - 1 தேக்கரண்டி
  13. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  14. 1 கொத்து - கறிவேப்பிலை
  15. 2 தேக்கரண்டி - புதிய கொத்துமல்லி

வழிமுறைகள்

  1. 3 மணி நேரங்களுக்கு கடலைப்பருப்பை சிவப்பு மிளகாயுடன் ஊறவைத்து அதிகம் தண்ணீர் விடாமல் கரடுமுரடான சாந்தாக அரைத்து, ஒரு பாத்திரத்திற்கு மாற்றி உப்பு 1/2 தேக்கரண்டி சேர்த்துக்கொள்ளவும்.
  2. இடலி பள்ளங்களில் எண்ணெய் தடவி சிறிய வடை வடிவத்திற்கு தட்டி 10 நிமிடத்திற்கு அல்லது வேகும்வரை வேகவைக்கவும். தீயிலிருந்து எடுத்து ஆறவைக்கவும்.
  3. எண்ணெய் சட்டியை சூடுபடுத்தி, வறுத்த கிராம்புகள், இலவங்கப்பட்டைகளை வறுத்துக்கொள்ளவும், வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்க.
  4. தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அவை மிருதுவாகும்வரை சமைக்கவும். 2 கப் தண்ணீர், சாம்பார் பொடி சேர்த்து கொதி நிலைக்குக் கொண்டுவரவும்.
  5. வடைகளை உடைத்து, குழம்பைச் சேர்த்து மூடி நடுத்தர சூட்டில் மேலும் 3-4 நிமிடங்களுக்கு அல்லது குழம்பு அடர்த்தியாகும்வரை சமைத்து தீயை நிறுத்தவும். புத்தம்புதிய கொத்துமல்லியைச் சேர்த்து செட் தோசை மற்றும் இட்லியோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்