வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு மொச்சைக் குழம்பு

Photo of Chettinadu Mochai Kuzhambu by Kalpana V Sareesh at BetterButter
3182
82
4.0(0)
0

செட்டிநாடு மொச்சைக் குழம்பு

Nov-23-2015
Kalpana V Sareesh
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மொச்சைக்கொட்டை - 1 கப்
  2. வெங்காயம் - 10 எண்ணிக்கை
  3. பூண்டு - 6 பல்
  4. வெங்காயம் - 1 எண்ணிக்கை
  5. தக்காளி - 1 எண்ணிக்கை
  6. புளி விழுது- 1 தேக்கரண்டி
  7. குழம்பு பொடி - 3 தேக்கரண்டி
  8. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
  9. கடுகு - 1 தேக்கரண்டி
  10. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
  11. சிவப்பு மிளகாய் - 1எண்ணிக்கை
  12. கறிவேப்பிலை - 1 கொத்து
  13. நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
  14. உப்பு - 1தேக்கரண்டி அல்லது தேவையான அளவு
  15. பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
  16. சீரகம் - 1 தேக்கரண்டி
  17. மிளகு - 1 தேக்கரண்டி
  18. மல்லி - 1 தேக்கரண்டி
  19. பூண்டு - 2 பல்
  20. காய்ந்த சிவப்பு மிளகாய் - 3 எண்ணிககை

வழிமுறைகள்

  1. பெருஞ்சீரகத்திலிருந்து சிவப்பு மிளகாய் வரை சேர்வைப்பொருள்களைச் சாந்தாக அரைத்து, இரண்டொரு தேக்கரண்டி தண்ணீர் விட்டு எடுத்து வைக்கவும்.
  2. இரவு முழுவதும் போதுமான தண்ணீர் மொச்சையை ஊறவைத்து, அடுத்த நாள் தண்ணீரை வடிகட்டி பிரஷர் குக்கரில் ஒரு தேக்கரண்டி உப்பு, 2 கப் தண்ணீர் விட்டு 5 விசில்களுக்கு சமைக்கவும். பிரஷர் குறைந்ததும் தண்ணீர் நீக்கிவிட்டு மொச்சையைப் பயன்படுத்தவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெயை சூடுபடுத்தி, கடுகைச் சேர்த்து வெடிக்கவிட்டு கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய், வெந்தயம், சேர்த்து நன்றாக வதக்கி வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. தக்காளி சேர்த்து நன்றாகக் கலந்து மிருதுவாகும்வரை சமைத்து, 2 கப் தண்ணீர், புளி கரைசல், உப்பு சேர்த்து 4 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.
  5. இப்போது அரைத்த சாந்தை, பெருங்காயத்தை, குழம்பு தூளை மொச்சைக் கொட்டையை சேர்த்து வேகவைக்கவும், தோராயமாக 10 நிமிடங்களுக்கு கொதிக்கட்டும் அல்லது குழம்பு அடர்த்தியாகும் வரை கொதிக்கட்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்