வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு பன்னீர் குழம்பு

Photo of Chettinad Paneer Curry by Priya Suresh at BetterButter
12374
128
3.8(0)
0

செட்டிநாடு பன்னீர் குழம்பு

Nov-27-2015
Priya Suresh
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1/4கிலோ பன்னீர் (நடுத்தர அளவில் நறுக்கிக்கொள்க)
  2. 1 கப் வெங்காயம் (நன்றாக நசுக்கப்பட்டது)
  3. 2 எண்ணிக்கை தக்காளி (நறுக்கப்பட்டது)
  4. 4 எண்ணிக்கை காய்ந்த மிளகாய் (துண்டாக்கப்பட்டது)
  5. 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  6. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  7. 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள்
  8. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  9. சுவைக்கேற்ற உப்பு
  10. எண்ணெய்
  11. கொஞ்சம் கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. பன்னீர் துண்டுகளை வெந்நீரில் ஊறவைக்கவும். போதுமான எண்ணெயைச் சூடுபடுத்தி பெருஞ்சீரகத்தையும் காய்ந்த மிளகாயை வறுத்து உடனே நசுக்கிய வெங்காயத்தையும் கறிவேப்பிலையையும் சேர்த்து எல்லாவற்றையும் சிறிது நேரம் வறுக்கவும்.
  2. இப்போது நறுக்கப்பட்டத் தக்காளி, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வெங்காயம் பளபளப்பாகும்வரை வதக்கவும்.
  3. மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி எல்லாவற்றையும் கலந்து பாத்திரத்தை மூடி சிம்மில் சிறிது நேரம் வேகவைக்கவும்.
  4. இதற்கிடையில் தண்ணீரில் இருந்து பன்னீரை எடுத்து வடிக்கட்டி, போதுமான எண்ணெயை சூடுபடுத்தி பன்னீர் துண்டுகளை வறுத்து எடுத்து வைத்துக்கொள்க.
  5. இப்போது வறுத்த பன்னீர் துண்டுகளை சிம்மில் உள்ள குழம்பில் சேர்த்து குழம்பு சுண்டும்வரை சூடுபடுத்தவும்.
  6. ரொட்டி அல்லது புலாவோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்