வீடு / சமையல் குறிப்பு / லக்னோவ் மட்டன் குருமா

Photo of Lucknowi Gosht Korma by Farrukh Shadab at BetterButter
5810
214
4.7(0)
0

லக்னோவ் மட்டன் குருமா

Nov-28-2015
Farrukh Shadab
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • ஆவாதி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 1.5 கிலோ ஆட்டிறைச்சி (மட்டன் எலும்புடன்) துண்டுகளாக வெட்டியது.
  2. 4 பெரிய வெங்காயம் நன்றாக நறுக்கியது
  3. 400 கிராம் தயிர் நன்றாக கடைந்தது
  4. 1 தேக்கரண்டி கொத்தமல்லித் தூள்
  5. 1 தேக்கரண்டி காஷ்மீர் சிகப்பு மிளகாய்த்தூள்
  6. சில துளிகள் கேவ்ட எசன்ஸ்
  7. 3 தேக்கரண்டி வெதுவெதுப்பான பாலில் ஊறவைத்த ஒரு சிட்டிகை குங்குமப்பூ
  8. 4 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  9. 1/4 டீக்கரண்டி ஜாதிக்காய் தூள்
  10. 1/4 டீக்கரண்டி மேஸ் தூள்
  11. 5 தேக்கரண்டி எண்ணெய்
  12. 5 தேக்கரண்டி நெய்
  13. உலர் வறுத்தப் பொருட்கள்:
  14. 1 1/2 அங்குலம் இலவங்க பட்டை
  15. 6-7 பச்சை ஏலக்காய்
  16. 6-7 கிராம்பு
  17. 8 கருப்பு மிளகு
  18. 1 டீக்கரண்டி கசகசா
  19. 10-12 முந்திரி பருப்பு
  20. 2 கருப்பு ஏலக்காய்

வழிமுறைகள்

  1. அடிகனமான பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடாக்கிக் கொள்ளவும். இதில் வெங்காயம் சேர்த்து மிருதுவாகவும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதை கருகவிட வேண்டாம் இல்லையெனில் அது குழம்பை கசப்பாகிவிடும்.
  2. அரைவையில் அனைத்து உலர் வறுத்த பொருட்களையும் மற்றும் வறுத்த வெங்காயம் சேர்த்து நன்றாக பசைப்போன்று அரைத்துக் கொள்ளவும். இதை தனியாக வைத்துக் கொள்ளவும்.
  3. அதே கடாயில் மீதமுள்ள நெய் மற்றும் எண்ணெய் கலவையை சேர்த்து மட்டன் துண்டுகளை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
  4. பின்பு இதை தனியாக எடுத்து வைத்து விடவும். இப்போது அதே கடாயில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2-3 நிமிடம் வறுக்கவும். அரைத்த மசாலா-வெங்காயம் விழுது, கொத்தமல்லி தூள், சிகப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து வையுங்கள்.
  5. இப்போது கடைந்து வைத்த தயிரை சேர்த்து, நன்கு கலக்கும் வரை கிண்டவும். எண்ணெய் தனியே பிரிந்து வரும் வரை 3-4 நன்கு வதக்கவும். இப்போது வதக்கிய மட்டன் துண்டுகள், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்க்கவும். அவை அனைத்தும் நன்கு நன்கு மட்டனில் சாரும் வரை வேகவிடவும். பிறகு குங்குமப்பூ பால், கேவ்டா எஸ்சென்சை சேர்க்கவும்.
  6. நீங்கள் குருமா அதிக அளவில் வேண்டும் என்று நினைத்தால் அதில் நீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக மேஸ் தூள் மற்றும் ஜாதிக்காய்த் தூள் சேர்த்து லேசாக கலந்துக்கொள்ளவும்.
  7. மனமும் ருசியும் கொண்ட லக்னோ மட்டன் குருமா பரிமாறுவதற்கு தயாராக உள்ளது, கொத்தமல்லி இலையை அலங்கரித்துக்கு தூவிக் கொள்ளவும் (தேவையெனில்) உங்கள் விருப்படி சூடாக நாண்/ ஷீர்மல்/ புரோட்டா அல்லது புலாவுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்