வீடு / சமையல் குறிப்பு / தயிர் சாதம்

Photo of Curd Rice by Poonam Bachhav at BetterButter
3807
142
4.7(1)
0

தயிர் சாதம்

Nov-28-2015
Poonam Bachhav
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 கப் அரிசி
  2. 1 1/2 கப் தயிர் (சாதாரண இனிப்பு சேர்க்கப்படாத தயிர்)
  3. 1/4 கப் பால்
  4. 1 காய்ந்த மிளகாய்
  5. 1ல் இருந்து 2 கொத்து கறிவேப்பிலை
  6. 2ல் இருந்து 3 பச்சை மிளகாய், நன்றாக நறுக்கப்பட்டது
  7. புதிய கொத்துமல்லி அலங்காரம் செய்வதற்கு
  8. 1/4 தேக்கரண்டி கடுகு
  9. ஒரு சிட்டிகை பெருங்காயம்
  10. 1 தேக்கரண்டி தோலுரித்த, உடைத்த கருப்பு உளுந்து (வெள்ளை உளுந்து)
  11. 2ல் இருந்து 3 தேக்கரண்டி மாதுளம்பழ விதைகள் (விரும்பினால்)
  12. 1 தேக்கரண்டி எண்ணெய்
  13. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. அரிசியை நன்றாகக் கழுவி ஒரு பாத்திரத்தில் அல்லது ஒரு பிரஷர் குக்கரில் 2 1/2 கப் தண்ணீருடன் பூப்போல் வரும்வரை வேகவைக்கவும். நான் பிரஷர் குக்கரில் 3 விசில்களுக்கு வேகவைத்தேன். இந்த சமையலுக்காக அரிசி சற்றே அதிகம் வேகவைக்கப்படவேண்டும்.
  2. ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். சாதம் சூடாக இருக்கும்போதே பாலைச் சேர்த்து சாதத்தை கரண்டியால் மசிக்கவும். தயிர்சாதத்தில் க்ரீம் போன்ற பாத்தம் உங்களுக்குத் தேவையென்றால் இந்த சமயத்தில் கொஞ்சம் வெண்ணெய் அல்லது நெய் சேர்க்கலாம்.
  3. சாதத்தை முழுமையாக ஆறவிடவும். இப்போது தயிரைத் தொடர்ந்து உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். நறுக்கப்பட்டக் கொத்துமல்லி, பச்சை மிளகாயைச் சேர்க்கவும்.
  4. தாளிப்பிற்கு, ஒரு சிறிய வானலியை எடுத்து எண்ணையை சூடுபடுத்தி கடுகை சேர்க்கவும். கடுகு பொரித்ததும், உடைத்த உளுந்தை கரிவேப்பிலை, சிவப்பு மிளகாய், பெருங்காயம் ஆகியவை சேர்த்ததோடு சேர்க்கவும். 30 விநாடிகளில் இருந்து 1 நிமிடம் வரை வறுத்து, தீயை நிறுத்தவும்.
  5. இவற்றை தயிர் சாதத்தின் மீது ஊற்றிக் கலந்துகொள்ளவும். மாதுளை விதைகளால் அலங்கரித்து உங்கள் விருப்பத்திற்கேற்ப ஊறுகாயுடன் பரிமாறி அப்படியே ருசிக்கவும். வறுத்த முந்திரிபருப்பு, உலர் திராட்சை அல்லது திராட்சைப் பழங்களையும் அலங்காரத்திற்கு நீங்கள் பயன்படுத்தலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Seka Nijandhan
Aug-21-2018
Seka Nijandhan   Aug-21-2018

பச்சை பால் அல்லது கொதித்த பால் சேர்க்க வேண்டுமா

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்